Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்: Top News
[Saturday 2020-02-22 20:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு செயலி (Application) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பின் அனுசரணையுடன் மயூ சைபர் சொலுஷன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் ‘சவாரி’ என்னும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் இந்த வலையமைப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மயூ சைபர் சொலுஷன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு என்னும் அமைப்பின் பிரதம ஒருங்கிணைப்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமான இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 300இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் கலந்துகொண்டதுடன் இதன்போது போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு செயலி தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.

இன்று கொழும்பு உட்பட நகர் பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை வீட்டில் இருந்துபெற்றுக்கொள்வதற்கு இலகுவான பல மென்பொருள்கள் இயங்கிவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இது முதன்முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த செயற்றிட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மற்றும் அன்றாட சேவையில் ஈடுபடும் வான், கார்கள் இணைத்துக்கொள்ளப்பட்டவுள்ளன.

இளைஞர்களின் ஒன்றிணைந்த வெளியீடாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘சவாரி’ மென் பொருளினை சிமார்ட் தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்து பதிவேற்றி தங்களுக்கான போக்குவரத்தினை செய்துகொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா