Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Sunday 2020-02-23 09:00]

பத்து ஆண்டுகளை முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு தொட்டுவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்னவென்ற மக்களின் கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. மக்கள் அரங்கம் என்ற பெயரில் சந்திப்புக்களை நடாத்தி வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சமீபத்தில் ஜேர்மனியின் ஸ்ருட்காட், டோர்ட்முன்ட் ஆகிய நகரங்களில் கூட்டங்களை நடாத்தியிருந்தது. அமெரிக்காவிலும் நடாத்தியிருந்தது. 2009க்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தடத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் பற்றி அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கருத்துரையினை வழங்க, சமஅரசியல் நிலைவரம் குறித்த உரையோடு பொதுமக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்தனையூடாக பதில் அளித்திருந்தார். புலம்பெயர் அமைப்புக்களிடையே ஒற்றுமை, தாயக மக்களுக்காக உதவிகள், முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள், அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கான நீதி, புலம்பெயர் இளையோர்களின் பங்களிப்பு, சர்வதேசத்தின் நிலைப்பாடு, சிறிலங்கா அரசின் போக்கு என்று பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில்கள் அளிக்கப்பட்டது.

- அபிவிருத்தி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தமிழர்களின் அடையாள அரசியலை, பண்பாட்டு உரிமைகளை இல்லாது செய்கின்றது. அபிவிருத்தி என்ற கவர்ச்சிகரமான சொல் மூலம் சர்வதேசத்தினை கவர்ந்திழுக்கின்ற உத்தியினை சிறிலங்கா கையாளுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தந்திரத்துக்குள் சர்வதேசம் அகப்பட்டு செல்கின்ற நிலைதான் காணப்படுகின்றது. இது நமக்குள்ள பெரும் சவாலான விடயம்.

- சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் செல்லவோ, அதன் செயற்பாட்டுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டோ இருக்க முடியாது. நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நம்து செயற்பாடுகள் இருக்க முடியும். அதன் அடிப்படையில்தான் எமக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றினை அமைக்கும் முனைப்பில் நாம் உள்ளோம்.

- சர்வதேச சக்திகள் கொழும்புடன் மட்டும் தமது தொடர்புகளை பேணுவருகின்றனர். ஆனால் இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல்சார் அரசியலில் தமிழர் தேசம் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒன்று என்ற வகையில், சர்வதேச சக்திகள் எம்முடனும் தொடர்புகளை பேண வேண்டிய நிலையே தேவையானது. அவ்வாறான நிலையினை எட்டுவதற்கான ஒரு முனைப்பாக இந்த நாம் உருவாக்குகின்ற வெளிவிவகாரக் கொள்கை அமையும் என நம்புகின்றோம்.

- தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ, சிறுபான்மை இனமாகவோ ஏற்றுக் கொள்கின்ற நிலையில் சிறிலங்கா அரசு இல்லை என்பதனைதான் அதன் செயற்பாடுகள் காண்பிக்கின்றன. குறிப்பாக தமிழர் அரசியலையோ, தமிழர் அரசியல் தவைர்களையோ சிறிலங்கா அரசு நிராகரித்து வருகின்றமை. இது இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான ஒரு அரசியல் வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது. இந்நிலையில்தான் நாங்கள் இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச வெளியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வடிவத்தின் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

இளையோர் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகளை அமைச்சர் இந்துமதி கிருபசிங்கம் அவர்கள் எடுத்துரைந்திருந்தார். விளையாட்டு, சமூக நலன் அமைச்சின் செயற்பாடுகளை துணை அமைச்சர் கார்த்திகேசு கலையழகன் அவர்கள் எடுத்துரைக்க, மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் தனது அமைச்சின் செயற்பாடுகளை எடுத்துரைத்தார். தாயகத்தில் தொடர்பாடல் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் துணை அமைச்சர் சிவனேஸ்வரன் அவர்கள் எடுத்துரைத்திருந்தார். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மனியின் மூத்த அரசவை உறுப்பினர்கள் சுப்பிரமணியம் கந்தையா, பரமானந்தம் அவர்கள் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா