Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் பொய்யாவிளக்கு திரைப்படத்திற்கு விருது! Top News
[Friday 2020-02-28 18:00]

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணம் சார்ந்த திரைப்படத்துக்கான விருது பொய்யாவிளக்கு திரைப்படத்திற்கு கிடைத்த து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் சார்ந்த முதல் திரைப்படம் இதுவாகும். சிறீலங்கா இனவாத அரசின் போர்க்குற்றங்களை வெளியுலகிற்கும் எங்கள் வருங்கால சந்ததிக்கும் எடுத்துச் செல்லவிருக்கின்ற இந்தத் திரைப்படத்தினை ஒரு ஆவணப் பொக்கிசம் எனச் சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது உண்மையினை உள்ளபடி எடுத்து வந்திருக்கிறது என்பதுவும், போலிகளற்ற யதார்த்த சினிமாவாக இருக்கின்றதென்பதுவும் அனைவராலும் மெச்சப்பட்டு வருகிறது. ஈழ சினிமா தன் பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பொய்யா விளக்கு இருக்கப் போகின்றது.

தற்போது, ஒண்டாரியோ மாகாண திரைப்பட தணிக்கை சான்றிதழும் (14A - பதின்நான்கு வயதுக்கு மேல் தனியாகவும் பதின்நான்கு வயதிற்கு கீழ் குடும்பமாகவும் பார்க்கலாம்) இது பெற்றுள்ளது. இனி வரும் மாதங்களில் Toronto இல் பொது காட்சிகளாக பொய்யா விளக்கு திரைப்படத்தினை திரையிடும் முன்னெடுப்புகளை வெண்சங்கு கலைக்கூடம் ஆரம்பித்துள்ளது. ஏனைய இடங்களில் பிரத்தியேக காட்சிகள் தொடரும். இலண்டன் நகரில் சிறப்பு காட்சியாக இந்த வார இறுதியில் சனியன்று பின்வரும் திரையரங்கில் இடம் பெரும்.

Feb 29 - London on Saturday at 7 PM

Boleyn Cinema

7-11 Barking Street

E6 1PW London, United Kingdom.

Private Show ticket price: £20 for adult or two students

Movies are a great way to convey our history to future generations. Films dealing with the subject of the Holocaust were produced from the early 1940s before the extent of the Holocaust was widely known and have continued to be made since then. After the halocaust, it was films that brought the Genocide of the Jews to public knowledge. It is with this medium that Tamils can create awareness of their struggles to the outside world. Tamil’s struggle against Sri Lanka’s Genocide has not only huge number of painful stories to tell but also stories with bravery, sacrifices as well. It’s our responsibility to share these memories with future generations of Diaspora Tamils. History is always a great teacher and it will help our next generation to succeed.

============= The Lamp of Truth short intro - பொய்யா விளக்கு அறிமுகம் =====

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை அவலங்களை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பிற தேச மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்படமான பொய்யா விளக்கு உலகின் பல பக்கங்களிலும் பிரத்தியேக காட்சிகளாக திரையிடப்படுகிறது. இந்த முக்கியமான திரைப்படம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் மக்களோடு நின்று சேவையாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதையினை எடுத்து வருகிறது.

The movie, "The Lamp of Truth" in Toronto. This movie is based on true events that happened during the Mullivaikkal genocidal war. A story that needs to be told to our younger generations and to the outside world.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா