Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகிலே நடந்த முதல் மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்! (Virtual Family Get-together) Top News
[Monday 2020-03-30 13:00]

இன்று கொரோனா வைரஸ் காரணமாக கனடா டொரண்டோவில் 15வது நாள் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வருகிறோம்... இங்கு பொதுவாக வாரம் சுமார் 25க்கும் மேற்பட்ட கேளிக்கை மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு... இப்போது சமூக நலனுக்காக இம்மாதிரி நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளோம்.... ஆனால் மக்கள் சகா வீட்டிலேயே அடைந்திருக்கும் இந்த நேரம் அவர்களுக்கு ஓர் மன அழுத்தம் எற்பட்டிருக்கலாம் என்று அய்யப்பட்ட நான் ஏன் வீட்டில் இருந்தே அப்படி ஒர் நிகழ்ச்சி ஒன்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தி அவர்களின் மனதை ஓர் பீதி நிலையில் இருந்து மாற்றி உற்சாக மற்றும் தைரிய நிலைக்கு கொண்டு வர முடிவெடுத்தேன்....

அதன் முதல் சோதனை முயற்சியாக 10 குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்து 5 குடும்பங்கள் பங்கேற்க இணக்கம் தெரிவித்தனர்... இதற்கு "மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்" (Virtual Family Get-Together) என்று பெயரிட்டு இன்று சரியாக இரவு 7:00 மணிக்கு விழா கணினி/திறன்பேசி(Smartphone) மூலம் அனைவரும் ஒன்றுகூடினோம்....

விழா முறையான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் மனம் போன போக்கில் குழந்தைகளின் பாடல்கள், கிட்டார் இசை, குட்டிக் கதை சொல்வோம், பெண்கள் நடனம், பெரியவர்களின் அந்தாக்ஷரி, படம் கீறி விடை சொல்லும் விளையாட்டு என போட்டிகள் சுமார் 2:30 மணிநேரம் நடந்தது....

அடுத்ததாக நிகழ்ச்சி இன்னும் கலைகட்டியது.... ஆம் இந்தியாவில் இருந்து விஜய்/சன் டிவி புகழ் ஆதவன் அவர்களின் கொஞ்ச நடிங்க பாஸ் மற்றும் காமெடி நிகழ்ச்சி விழாவின் உச்சம்.... அடுத்து விஜய் டிவி சூப்பர் சிங்கர்கள் பாடகி அபர்ணா மற்றும் பாடகர் கேஷ்வ் இருவரும் நிறைய பாடல்கள் பாடி அமர்க்களப்படுத்தினர்... இதில் நேயர் விருப்பமும் இருந்தது மிக்க மகிழ்ச்சி... இந்த நிகழ்ச்சிகள் சுமார் 2 மணி நேரம் பயணித்தது....

ஆக கனடா, இந்தியா இரண்டும் பல்லாயிரம் மைல்கள் தாண்டி இருப்பினும் அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு சுமார் 4:30 மணிநேரம் நிகழ்ச்சி நடைபெற்றது மகிழ்ச்சி மற்றும் அல்ல ஓர் சிறந்த வெற்றியே... ஒன்றுகூடலில் பங்குபெற்ற குடும்பங்களுக்கும் நான் கேட்டவுடன் காலை 5:30 மணிக்கு (இந்திய நேரப்படி) எழுந்து எங்களை எல்லாம் மகிழ்வித்த அந்த கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல... நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி...

விரைவில் இதே போல் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி அடுத்த வாரம் நடத்தப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன.... உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.... அதன் அறிவிப்பு விரைவில்.... இந்நிலையில் என்னால் இயன்ற ஒரு நம்பிக்கையும் மனநிறைவும் தருவதில் ஓர் ஆனந்தமே...

குறிப்பு: அனைவரும் வீட்டில் இருந்தே இந்த கொரோனாவை வெல்வோம்... நன்றி!

வள்ளிக்கண்ணன் மருதப்பன்,
சமூக சேவகர் மற்றும்
நிறுவனர், கனடா தமிழ்ச் சங்கம்

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா