Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இணுவைக்கந்தனின் இளைஞர்களின் முயற்சியில் உதவிகள்! Top News
[Sunday 2020-04-05 20:00]

இணுவைக்கந்தனின் இளைஞர்களின் முயற்சியில் கொரோனா நோய் பரவலால் அன்றாட உழைப்பில்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அன்பர்கள் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவையை போக்கும் முகமாக நிவாரணப் பொருள் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்குவதற்கு சுவிஸர்லாந்தில் வசிக்கும் இணுவில் மஞ்சத்தடியை சேர்ந்த குணரட்ணம் ஐயாவின் மகளான இராஜமனோகரி அவர்களால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக ரூபா 60,000 அன்பளிப்பு செய்யப்பட்டது.

அவர் தந்த 60,000/= ரூபாவில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 KG அரிசி, 10 KG கோதுமை மா, 2 KG மஞ்சள் பருப்பு, 2 KG சீனி, 1/4 KG தேயிலை, 2 சோயமீட் பக்கட்டுக்கள் , உப்பு பைக்கட் என எல்லாமாக தலா 3000/= ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இணுவிலை அண்டியுள்ள 20 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதை விட முருகையா சுவேதனன் தந்த 20 கிலோ தக்காளிப்பழங்களும் 1 கிலோ படி பகிர்ந்தளிக்கப்பட்டது. வேறு சிலரின் நிதிப்பங்களிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் 30 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் அவைகள் வழங்கப்படும்.

இன்றைய நிலையில் எல்லோருக்கும் நிதிப்பங்களிப்பு வழங்குவது சிரமமான காரியம். உங்களால் முடிந்தளவு பணம் எவ்வளவாக இருந்தாலும் நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பியவர்கள் +94772352667 , +94759800068 போன்ற இலக்கங்களினூடோ அல்லது Vathsangan Piraba , Gajan Rajah , Jena Jacksparrow போன்ற எமது முகநூல்களினூடாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

காலத்தினால்_செய்த_நன்றி_சிறிதெனினும்_ஞாலத்தின்_மானப்_பெரிது...

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா