Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இணுவைக்கந்தன் இளைஞர்களின் முயற்சியில் அடுத்த கட்ட உதவி! Top News
[Tuesday 2020-04-07 08:00]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் இணுவைக்கந்தன் இளைஞர்களின் முயற்சியில் அடுத்த கட்டமாக இன்றைய தினமும் (06.04.2020) ரூ 63,000/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மேலும் 20 குடும்பங்களுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வழங்கி வைக்கப்பட்டது. இன்றைய இவ் உலர் உணவுப் பொருட்களுக்கு உதவிகள் வழங்கிய கொடையுள்ளங்களாக பிரான்சில் வசிக்கும் சசிக்குமார் சுஜிதா ரூபா 40,000/=, சிவப்பிரமம் ரூபா 2000/= , ஒரு அன்பர் ரூபா 1000/=, சிவகுமார் சிவரூபன் ரூபா 5000/=, பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் கென்னடி வீதி கல்வியங்காட்டில் வசிப்பவர் ரூபா 10,000/=, சங்கீர்த்தனன் செட்டிவளவு ரூபா 5000/= ஆகியோர் அன்பளிப்புக்களை வழங்கியிருந்தனர்.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 KG அரிசி, 10 KG கோதுமை மா, 2 KG மஞ்சள் பருப்பு, 2 KG சீனி, 1/4 KG தேயிலை, 2 சோயமீட் பக்கட்டுக்கள் , உப்பு பைக்கட் என எல்லாமாக தலா 3000/= ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இணுவிலில் கஷ்டத்தில் வாழும் 20 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் சிலரின் நிதிப்பங்களிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் பல குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. நாளைய தினம் மற்றும் நாளை மறுதினமும் அவைகள் வழங்கப்படும். உங்களால் முடிந்தளவு பணம் எவ்வளவாக இருந்தாலும் நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பியவர்கள் +94772352667 , +94759800068 போன்ற இலக்கங்களினூடோ அல்லது Vathsangan Piraba, Gajan Rajah, Jena Jacksparrow போன்ற எமது முகநூல்களினூடாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

காலத்தினால்_செய்த_நன்றி_சிறிதெனினும்_ஞாலத்தின்_மானப்_பெரிது...

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா