Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்! Top News
[Tuesday 2020-04-07 21:00]

ஏப்ரல் 6ஆம் திகதி, திங்களன்று, ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள், திரு. மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) மற்றும் திரு. நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) ஆகியோருடன் இணைந்து 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' எனும் முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் முயற்சியினூடாக ஸ்காபரோவிலுள்ள தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் 180 முதியோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கினர். 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' என்ற முயற்சி முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் வகையில் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் விதத்தில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விஜய் தணிகாசலம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததையிட்டு இவர் இம்முயற்சியினை ஆரம்பித்து வைத்தார்.

"முதியோர் குடியிருப்பில் வாழும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து 120 முதியோர் இல்லங்களுக்குத் தேவையான பால், பாண், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட உணவுகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையிட்டு நான் எனது நண்பர்களுடனும் எனது பகுதியிலுள்ள வணிகர்களுடனும் கலந்துரையாடினேன். இத்தருணத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் முழுக் குடியிருப்புகளுக்குமான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் தாமே வழங்க முன்வந்த மனோ சுப்பிரமணியம் அவர்களையும் நவநீதன் கந்தசாமி அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

இக்கட்டான இச்சூழ்நிலையில் ஒருவரையொருவர் பராமரிக்கும் ஒன்ராறியோவின் மாண்புக்கு இவர்கள் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்" என சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். "இக்கட்டான இவ்வேளையில் நாம் ஒரே சமுகமாக இணைந்து எமது முதியவர்களுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாதது. மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசிய உடனேயே முதியோருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகவே அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிவகைகளையும் மேற்கொண்டோம்" என மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) தெரிவித்தார்.

இதுபற்றி நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, "எம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பராமரிப்பதும் அவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையாகும். சூழ்நிலைக்கேற்ப எமது முதியோர்கள் தம்மைத் தனிமைப்படுத்தும் சரியான முடிவை மேற்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தம்மையும் தம்மைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பது முக்கியமானதாகும்" என்றார்.

"வாரந்தோறும் முதியோர் குடியிருப்பில் உள்ள வயதானவர்களுக்குமான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை தன்னார்வலர்கள் வழங்கவுள்ளனர். இதன்போது, இவர்கள் உடல் ரீதியான சமுக இடைவெளி விதிகளைப் பேணுவதுடன், தொற்றுநோய் பரவல் தடுப்பு வழிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடிப்பர். கருணை மட்டுமே நாம் இத்தருணத்தில் பிறரிடம் பரப்பவேண்டியதொன்றாகும்" என மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

நெருக்கடியான இவ்வேளையில், உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ மளிகைப் பொருட்கள், மருந்துகள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படின், ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு vijay.thanigasalam@pc.ola.org என்ற மின்னஞ்சலில் அல்லது (416) 283-8448 என்ற எண்ணில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தகவலையும் பதிவுசெய்யுங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா