Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடியத் தமிழர் தேசிய அவையின் கோவிட்-19 அவசரகால வேலைத்திட்டம் பற்றிய அறிவித்தல்!
[Wednesday 2020-04-15 08:00]

போரினால் தொடர்ச்சியாக அழிவுகளுக்குட்பட்ட எம் தாயக மக்களில் பல குடும்பங்கள் இன்றுள்ள சூழ் நிலையில் மிக மோசமான உணவுத் தட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுக் காரணமாக நாட்டில் தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதனால்; அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடாத்துகின்ற எமது உறவுகளும் தங்களது தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி உள்ளதனால் அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுகின்றனர். முக்கியமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், மலையகம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பின் தங்கிய கிராமப்புறங்களில் இத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக நிலவுகின்றது.

இச் சூழ்நிலை நீண்டகாலம் தொடர்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இருப்பதனால் இம் மக்களை பட்டினியிலிருந்து காப்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் நாம் எல்லோரும் சேர்ந்து மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உணவு பகிர்ந்து கொடுக்கும் உடனடி வேலைத் திட்டத்தில் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்கனவே பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றது.

நாம் வாழும் கனடா நாட்டிற்கும் எங்கள் அன்பளிப்பாக வைத்தியசாலைக்கு பல நூற்றுக்கணக்கான FACE-SHIELD கொடுக்கப்படுகின்றது. இத் திட்டத்திற்கு கனடாத் தமிழ்க் கல்லூரி, Universal Vocals, d2b Supplies மற்றும் பல நிறுவனங்களும் அமைப்புக்களும் இணை அனுசரணை வழங்கி இருக்கின்றனர். இவ் உபகரணத்தை உற்பத்தி விலைக்கு செய்து கொடுக்கும் PWD நிறுவனத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் முதியவர்களுக்கான மளிகைப்பொருட்கள், மருந்து வகைகள் பெறுவதற்கான இலவச போக்குவரத்து உதவி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம் (அனுசரணை: AIMEX, DOORDELLY.COM). உதவி தேவைப்படுபவர்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 416.301.4909 / 416.300.7174.

இது ஒரு தொடர்ச்சியான நீண்டகால வேலைத்திட்டமாக அமையும் என்ற அடிப்படையில் அனைத்துக் கனடிய தமிழ் மக்களிடமும் அவசர பொருளாதார உதவிக்குரிய வேண்டுகோளை விடுக்கின்றோம். தற்போதய சூழ்நிலையில் உங்கள் அனைவருடைய பங்களிப்பையும் எமது வங்கிக்கணக்கிற்கு நேரடியாக மின்னஞ்சல்:info@ncctcanada.ca மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே மின்னஞ்சல் ஊடாக உங்கள் மேலதிக விபரங்களை அனுப்பி வைக்கவும். பற்றுச்சீட்டு உங்கள் மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ் வேலைத்திட்டத்தில் எல்லா அமைப்புக்களையும் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏற்கனவே இவ் வேலத்திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், மாவட்ட ரீதியான சங்கங்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்களுடைய வேலைகளை ஒருங்கிணைக்க வேண்டுகின்றோம். மக்களுக்கான வேலைத்திட்டத்தில் தொடர்ச்சியாக எம்முடன் இணைந்து பயணிக்கும் அனவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைக் கூறிக் கொள்கின்றோம்.

மளிகைப்பொருட்களுக்கான போக்குவரத்து: 416.301.4909 | 416.300.7174

நன்கொடை (மின்னணு வங்கி பரிமாற்றம்): info@ncctcanada.ca

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா