Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா தமிழ்ச் சங்கம் நடத்திய ஐந்து வெற்றிகரமான மெய்நிகர் நிகழ்ச்சிகள்! Top News Top News
[Friday 2020-05-01 21:00]

நாம் தற்சமயம் சந்தித்து வரும் கோரோணா வைரஸ் தோற்று காரணமாக, அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டும் அணைத்து நிறுவனங்களும் மூடியிருக்கும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம். இந்த சூழ்நிலையை மாற்றி ஒரு புத்துணர்வு தரும் வகையில் சோதனை நிகழ்வாக உலகின் முதல் முறையாக 5 மணி நேரத்திற்கும் மேலாக மார்ச் 28, 2020ம் தேதி சரியாக இரவு 7:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 12:30 மணி வரை நிகழ்வுகள் ஸ்கேய்ப் மற்றும் யூடுயூப் செயலிகளை பயன்படுத்தி பங்குபெற்ற கலைஞர்களும் சரி பார்வையாளர்களும் சரி அவர் அவர் வீட்டில் இருந்தே கலந்து கொண்டது மிகச்சிறப்பு.

இந்த நிகழ்ச்சியில் கனடாவில் இருந்து ராகமாலிகா மற்றும் கனடா தமிழ்ச் சங்க குழந்தைகள், நண்பர்கள்; இந்தியாவில் இருந்து சன்/விஜய் டிவி புகழ் ஆதவன், விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் கேஷவ் மற்றும் அபர்ணா கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வெற்றி விழாவின் விபரங்கள் முகநூல், சமூக வலைத்தளங்கள் மற்றும் தினமலர் பத்திரிக்கையில் செய்தியாக வந்ததும் மற்ற அமைப்புகளும் தொலைக்காட்சிகளும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை செய்ய தொடங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த வெற்றியினை தொடர்ந்து ஸ்கேய்ப், ஜூம் மற்றும் யூடுயூப் செயலிகள் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உலகளவில் இரண்டு நேரடி மெய்நிகர் நிகழ்ச்சிகள் நடைபெற்றதும் சுமார் 250க்கும் மேல் பங்குபெற்றும் 1000 க்கும் மேல் மக்கள் பார்வையிட்டதும் முத்தான மைல்கற்கள். ஏப்ரல் 4, 2020ம் தேதி மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வாக 5:30 மணி நேரமும், அடுத்து ஏப்ரல் 18, 2020ம் தேதி தமிழ் சித்திரை புத்தாண்டு நிகழ்வாக 6:00 மணி நேரமும் நடந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கனடாவில் இருந்து மருத்துவர்.ரகுராமன், பல் மருத்துவர்.சபேசன், ராகமாலிகா, ரேணுகா விக்னேஷ் அவர்களின் கலை அருவி பைன் ஆர்ட்ஸ் மாணவ மாணவிகள், பாடகி சின்மய் மற்றும் கனடா தமிழ்ச் சங்க குழந்தைகள், நண்பர்கள்; அமெரிக்காவில் இருந்து மருத்துவர்.பழனியப்பன் மாணிக்கம் மற்றும் ஷண்முகப்ரியா; இந்தியாவில் இருந்து பிரபல சித்த மருத்துவர்.சிவராமன், பேச்சாளர்/நடிகை.மதுவந்தி, விஜய் டிவி புகழ் நாட்டுப்புற கலைஞர் கோவிந்தராஜ், சன்/விஜய் டிவி புகழ் "அசத்த போவது யார்' கிறிஸ்டோபர் மற்றும் வெங்கடேஷ், பின்னணி பாடகர்கள் சுர்முகி, முகேஷ் மற்றும் செந்தில்தாஸ், விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ஹரிஹரசுதன், சுதர்ஷன் மற்றும் அபர்ணா, கீபோர்டு கலைஞர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏப்ரல் 11, 2020 மற்றும் ஏப்ரல் 25, 2020 தேதிகளில் இரண்டு மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் சுமார் 10 குடும்பங்களுடன் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் விஜய் டிவி புகழ் டான்சர்/நடிகர் அமுதவாணன் மற்றும் விஜய் டிவி "கலக்க போவது யாரு' புகழ் பாலா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு படம் வரையும் போட்டிகளும், கலாச்சார குடும்ப புகைப்பட போட்டிகளும் நடந்தது. பங்குபெற்ற குழந்தைகளுக்கு கனடா தமிழ்ச் சங்க சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டிகளின் வெற்றியாளர்களை தேர்வுக்குழு ஓவியர் ஜீவா மற்றும் அழகுக்கலை நிபுணர் மலர் தேர்ந்தெடுத்தனர். உலகில் முதல் முறையாகவும், தொடர்ந்து ஐந்து மெய்நிகர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய கனடா தமிழ்ச் சங்க நிறுவன தம்பதியர்கள் வள்ளிக்கண்ணன் மருதப்பன், பார்வதி வள்ளிக்கண்ணன் மற்றும் தன்னார்வு தொண்டர்களையும் மனமார பாராட்டலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா