Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உழைப்போ உலகின் மூலதனம்!.. நம்பிக்கையோடு உழைத்து வெற்றிபெறுவோம்!..
[Friday 2020-05-01 22:00]

எஸ். கருணாஸ் எம்.எல்.ஏ., மே நாள் வாழ்த்து!

வியர்வையும் இரத்தமும் கசிந்துருகும் நாள் மேநாள் ஆகும். உழைப்பவர்களின் மேன்மையான இந்த மே தினத்தில் உழைப்பின் உயர்வை உணர்வோம்! இந்த மே நாள் வரலாறு என்பது உழைப்பாளிகள் உலகை எழுதிய பெரும் வரலாறு! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள் உன்னத நாள் இந்த உழைப்பாளர் திருநாள்!

உழைப்பின் மேன்மையினை இந்த இனிய மே தினத் திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம். உழைப்பில் தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்! உழைப்பை மட்டுமே நம்புவோம்! உழைப்பே உலகின் மூலதனம்!

உலகெங்கும் மானுடம் சமூகம் தன்னைத்தானே.. தனிமைப்படுத்தி வீட்டிற்குள் ஓய்ந்திருக்கிறது.. கடுமையான உழைப்பை செய்யவிடாது கொரோனா தொற்று நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த சூழலில், மே உழைப்பாளர் தினத்தில் நாம் உறுதியோடு இருப்போம்! அனைத்தையும் கடந்து நம்பிக்கை கொள்வோம்!

பெருந்தொற்றிலிருந்து நம்மை காப்பாற்ற அரசாங்கமும், மருத்துவர்களும், செவிலியர்களும், காவல்துறையினரும், துப்பரவு பணியாளர்கள் என மனித சமூகத்தை மீட்க இரவு பகலாக உழைக்கிறார்கள் அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம்!

அனைவர்க்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா