Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை - யேர்மனி! Top News
[Monday 2020-07-27 09:00]

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.

சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய தமிழர் மீதான இன அழிப்பு மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.

அந்த வகையில் யேர்மனியின் தலைநகரில் 1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரப்பட்ட இவ்வேளையில்,சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்பட்ட 300,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் வகையில் நேற்றைய தின கவனயீர்ப்பு அமைந்தது.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பாரிய பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர். இளையோர்களால் பல்லினமக்களுக்கு யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரம் வழங்கி விளக்கங்களும் கொடுக்கப்பட்டது .

சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரக் கோரியும் உள்ளடங்கிய அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் மனுவும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா