Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பிய எம்.எல்.ஏ., கருணாஸ் மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்டோர்க்கு நன்றி! Top News
[Monday 2020-08-17 18:00]

கொரோனா தொற்றால் குணமடைந்து 16.08.2020 இன்று வீடு திரும்பும் எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்கள் மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட அனைவர்க்கும் தமது நன்றியை கூறியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் சேது. கருணாஸ் ஆகிய நான் எனது தொகுதி மேம்பாட்டு பணிகளிலும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரண பணிகளில் கலந்து கொண்டுதன் விளைவால் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த 06.08.2016 அன்று சென்னை கிங்க்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் என்னை ஆக்கப் பூர்வமாக கவனித்தனர். எனது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தனர். தொடர்ந்து எனக்கு அச்சம் நீங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்து, நான் இப்போது நான் கொரோனா இல்லா கருணாஸாக 16.08.2020 இன்று மருத்துவமனையிலிருந்து டிச்சார்ஸ் ஆகிறேன்.

நல்ல மருத்துவம், நல்ல உணவு, சுத்தமான இடம், சுகாதாரமாக பேணிக்காத்தல் உள்ளிட்ட அனைத்தையும் மேம்பட செய்து எனக்கு உதவிய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்த தமிழக முதல்வர் மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதார துறை அமைச்சர் ஆகியோர்க்கும் எனது நன்றி!

அதேபோல் எனக்காக பிராத்தனை செய்த எனது தொகுதி வாழ் மக்களுக்கும், எனது முக்குலத்தோர் புலிப்படை உறவுகளுக்கும், சமூக ஊடக பத்திரிகை துறை நண்பர்களுக்கும் மற்றும் அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா