Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒண்டாரியோ முதல்வர் Doug Ford தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பு! Top News
[Thursday 2020-08-20 08:00]

தமிழின அழிப்பு தொடர்பான Bill 104 தனி நபர் சட்ட வரைபான Tamil Genocide Education Week Act ஐ சட்டமாக்கும் 3ம் வாசிப்பு விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை தான் வழங்குவேன் என ஒண்டாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். 18-08-2020 அன்றுகாலை Scarborough Rouge Park மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்ட ஒண்டாரியோ முதல்வர், தமிழின அழிப்பு தொடர்பான தமிழின அழிப்பு தொடர்பான Bill 104 தனி நபர் சட்ட வரைபு குறித்து சரியான நேரம் அமையும் போது கனேடிய பதில் பிரதமர் கிறிஸ்டியா பிரீலாண்டுடனும் பேசுவுள்ளதாக குறிபிட்டுள்ளார்.

Scarborough பகுதியில் உருவாக உள்ள புதிய தொடரூந்து நிலையம் தொடர்பாகவும், Covid 19 பெரும் பரவல் காலத்தில் Scarborough மக்களது உதவிகள் சேவைகள் தொடர்பாகவும் கருத்து கூறியதுடன் இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பினால் பாதிப்படையும் தமிழர்கள் இங்கு புலம் பெயரவேண்டும் எனவும் அவ்வாறு புலம் பெயரும் தமிழர்கள் பலர் தொழில் முனைவோர் மற்றும் சிறந்த குடிமக்களாக செயற்படுவதாகவும் பாராட்டினார்.

டொரோண்டோவின் மிகப்பெரிய கல்வி சபையான TDSB யினால் முன்வைக்கப்பட்ட பாடசாலை நேர குறைப்பு மற்றும் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைதல் ஆகிய திட்டங்களை மாகாண அரசு நிராகரித்துள்ள நிலையில், 2 வது பரவல் இடம்பெற்றால் பாட சாலைகள் மூடபடுமா அல்லது மாற்று திட்டங்கள் குறித்து கேட்டபோது, ஒண்டாரியோ மற்றும் டொரோண்டோவின் சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைவாக முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மாகாணம் ஆசிரியர்களை மேலதிகமாக பணிக்கு அமர்த்துவதற்க்கான நிதி உதவிகளை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.

மற்றுமொரு கேள்வியான, கனடாவின் நிதி அமைச்சர் பில் மோர்னே பதவி விலகிய நிலையில் புதிய நிதி அமைச்சராக முதல்வர் டக் போர்ட்டுடன் இணைந்து பணியாற்ற கூடிய பதில் பிரதமர் பிரதமர் கிறிஸ்டியா பிரீலாண்ட் குறித்து கேட்டபோது, அவருக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும், மிக சிறப்பாக செயலாற்ற கூடிய ஒருவர் எனவும் தனது முழுமையான ஒத்துழைப்பை அவருக்கு வழங்க தயாராவுள்ளதாகவும் தம்மைக்கும் அவருக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளதாகவும் முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.

இதேவேளை, Scarborough Rouge Park மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தின் சார்பிலும் Scarborough Rouge Park தொகுதி சார்பிலும் Peoples Champion என்னும் கௌரவ கேடயம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா