Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வரலாற்றில் பெருந்தவறு..! - மாய மானாக மறைந்துபோன பிரம்டன் தமிழ் ஒன்றியமும் அதன் பிரதிநிதிகளும்?.. Top News
[Tuesday 2020-09-01 21:00]

யாரை யார் தான் நோவது?? - 30/08/20 அன்று காலை பிராம்டன் நகரசபை முன்றலில் இருந்து 430 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள கனடா தலைநகர் ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி தமிழ் இன உணர்வாளர்களது நடைபவனி ஆரம்பமானது. பிராம்டன் நகர பிதா மதிப்புமிகு திரு - பற்றிக்பிரவுன் அவர்கள் ஆசிச் செய்தி வழங்கி தமிழ் மக்கள் மீதான தனது விசுவாசத்தை காண்பித்தார். !! ஆனால் பிரம்டன் தமிழ் ஒன்றியம் தலைமறைவு..! பொது மக்கள் கடுமையான விமர்சனம்.

இன நலன் சார்ந்த பரந்துபட்ட சிந்தனை மனப்பான்மை கொண்ட தலைமை பண்புகளை கொண்டிராத தலைவர் பொருளாளர் செயலாளர் பதவி களில் உள்ளவர்கள் தமிழ் அமைப்புகளுக்கு அதன் நற்பெயருக்கு என்றுமே குந்தகமாக இருப்பர் என்பது பல துறைகளில் பல அமைப்புகளில் கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனையே தற்போதைய பிரம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாக கட்டமைப்பும் நிரூபித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகழுக்காக தொடர் போராட்டம் செய்து தாயகத்தில் கதறியழும் தாயக மக்களுக்கு குறிப்பாக குறிப்பாக தமது பிள்ளைகளை கணவன்மாரை உறவினர்களை இழந்துள்ள அந்தத்தாய் மாரது கண்ணீருக்கு.. நீதி வேண்டி உலக அளவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு.. ஆதரவு நல்கி கனேடிய மத்திய அரசிடமும் நீதிகோரி மனு ஒன்றை கையளிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்று தன்னார்வலர்களாக நீண்டதூரம் தம்மை வருத்தி நடக்கிறார்கள்.

பிராம்டன் நகரசபை முன்றலில் 30 08 2020 அன்று ஆர்ப்பமாகிய இந்நிகழ்வுக்கு அப்பிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகிய பிரம்டன் தமிழ் ஒன்றிய மானது தமது அமைப்பு ரீதியாகவோ அல்லது அந்த அமைப்பில் உள்ள தனிமனிதர்கள் ரீதியாகவோ ஆதரவு நல்க மறுத்தமை ஏன்..? பிராம்டன் தமிழ் ஒன்றியம் என பெரிதாக மக்களால் மதிக்கப்பட்டு வரும் தமிழ் ஒன்றியம் இந்நிகழ்வை புறக்கணித்தமை தமிழின செயற்பாட்டு திசைகளில் மனிதநேய நாகரிகத்துக்கும் தமிழ் இன மரபு பண்பாட்டுக்கும் முரணானது. இழுக்கானது.

குறிப்பாக இந்த ஆரம்ப நிகழ்வில் பிராம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாகிகள் எவருமே கலந்துகொண்டு தமது முகங்களை காண்பித்து ஆதரவை தெரிவித்து ஒரு ஆதரவு அறிக்கையை வெளியிட்டு தமது நகரசபை முற்றத்தில் தமது ஆதரவை தெரிவிக்கமறுத்துள்ளமையானது வெட்கக்கேடானது என்பதை அங்கு கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அன்பார்ந்த பிராம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாகிகளே உறுப்பினர்களே எமது நண்பர்களே நீங்கள் உங்களது பிரதேசத்தில் 30 08 2020 அன்று அப்படி என்னதான் முக்கிய விடயங்களில் அனைவரும் ஒன்றாக ஈடுபட்டிருந்தீர்கள்..? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியுமா? மக்களுக்காக நீங்களா? உங்களுக்காக மக்களா? உங்களது அமைப்பின் குறிக்கோள் என்ன? நீங்கள் எதை நோக்கி தமிழ் தேசியம் பேசி நகர்கிறார்கள்? மேற்படி நிகழ்வை இன்று உலகலாவியரீதியில் தமிழ் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். 7 கண்டங்களிலும் அதே நாளில் பல போராட்டங்களை தமிழ் மக்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் ஆனால் நீங்களோ புறக்கணிப்பு மற்றும் பாராமுகம் செய்துள்ளீர்கள். என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளீர்கள்.

ஈழம் சாவடி என்னும் நிகழ்வுமூலம் கனேடிய தமிழர்கள் மத்தியில் உங்களை பிரபல்யப்படுத்திய நீங்கள் அனைவரும் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான நீதிகோரல் விடயத்தில் உங்களது நகரசபை வளாகத்தில் ஆர்ப்பமாகிய நிகழ்வில் உங்களில் எத்தனைபேர் கலந்துகொண்டு ஆதரவை நல்கியிருந்தீர்கள்? தற்போது பிராம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாகிகளாக இருக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதற்கான பதிலை உங்களை பெரிதும் நட்புடன் நேசிக்கும் உங்களது பிரத்தேச பொதுமக்களுக்கும் தமிழ் சமூக ஆர்வலர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பதில் தரவேண்டும் என்பது பலராலும் இன்று முன்வைக்கப்படும் கேள்வியாகவும் விமர்சனமாகவும் ஆதங்கமாகவும் உள்ளது.

உங்களது நகரசபைத் தலைவருக்கு எமது மக்கள் மீது இருந்த அந்த அக்கறை உங்களுக்கு எப்படி இல்லாமல் போனது? 430 கிலோ மீட்டர்கள் நடக்கும் அந்த தமிழ் உள்ளங்களுக்காக ஆதரவாக நாலு வரி வாழ்த்து தெரிவித்து ஆதரவு அரிக்கை ஒன்றையோ அல்லது 4 நிமிடங்களயோ செலவழிக்க முடியாத நீங்கள் பிரம்டன் பிரதேச மக்களது பிரதிநிதிகளாக மக்களுக்கு இது விடயத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்?? தற்போது அமைப்பின் தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள் தங்களது வரலாற்று தவறை உணர்ந்து தமது பதவிகளை துறந்து இன நலன் சார்ந்து இயங்கக் கூடிய வர்களிடம் அமைப்பின் இறையாண்மையை பொறுப்புகளை கையளித்து விலகிச் செல்வார்களா? அல்லது தொடர்ந்தும் பதவி ஆசை கதிரை மோகத்தில் அசமந்தமாக இருப்பார்களா?

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா