Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து ஆரம்பித்த நெடும் நடைபயணம் இரண்டாம் நாள் இன்று ஏஜாக்ஸ் நகரை வந்தடைந்தது! Top News
[Wednesday 2020-09-02 08:00]

நமது உறவுகளுக்கு நீதி கிட்டாமல் நாங்கள் ஓயப்போவது இல்லை என்பதை இந்த கூட்டம் எடுத்துச் சொல்கிறது. -ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் விஜே தணிகாசலம் (ஏஜாக்ஸ், ஒன்ராரியோ) வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து தலைநகர் ஒட்டாவாவை இலக்கு வைத்து இடம் பெறும் நெடும் நடைபயணம் இரண்டாம் நாள் இன்று ஏஜாக்ஸ் நகரை வந்தடைந்தது. ஏஜாக்ஸ் நகரில் தமிழ்த்தாய் மன்றம் நெடும்பயணம் செல்லும் குழுவுக்கு வரவேற்பு வழங்கியது. 200 அதிகமான மக்களும் ஊடகங்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வுக்கு தமிழ்த்தாய் மன்றப் பொருளாளர் திரு.ஞானம் அன்ரனி அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் 'நாங்கள் ஒன்றுமை இன்றி சிதறிக் கிடக்கின்றோம் என நினைத்தேன் ஆனால் அந்த நினைப்பு தவறு என்பதை இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டம் நிரூபித்து இருக்கிறது என்றார்.

எழுச்சி கொண்ட மக்கள் சார்பாக நெடும்பயணம் மேற்கொள்பவர்களுக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றார் செல்வி சுடர்நிலா அவர்கள். அதைத் தொடர்ந்து வரவேற்புரை ஆற்றிய தமிழ்தாய் மன்ற செயலாளர் திரு.திருமுருகவேந்தன் அவர்கள் 'தமிழ்த்தேசியம் என்ற கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து உழைக்கவேண்டும், அமைப்புகளுக்கு அப்பால் நமது கொள்கை வெல்ல உழைக்கவேண்டும். எனக் கேட்டுக் கொண்டார். தமிழ்த்தேசியத்துக்காக உழைக்கும் எவருக்கும் தமிழ்த்தாய் மன்றம் துணைநிற்கும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு விஜே தணிகாசலம் அவர்கள் ' இந்த நெடும் பயணம் கனடிய நாடாளுமன்ற கதைவை மட்டும் தட்டப்போவது இல்லை. போகும் வழி நெடுகிலும் உள்ள பல்லின சமூகங்களின் கதவுகளையும் தட்டப்பேகின்றது. நமது உறவுகளுக்கு நீதி கிட்டாமல் நாங்கள் ஓயப்போவது இல்லை என்பதை இந்த கூட்டம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. என்றார்.

நிகழ்வில் தமிழக 'நெமிர்வு கலையக இயக்குநர் திரு.சத்தி இராவணன் அவர்களின் ஆரப்ப நிலை மாணவர்கள் சுடர்நிலா, தமிழ்க்கோ, புலிக்கோ மற்றும் பரிதி ஆகியோர் பறைமுழக்கம் இசை வழங்கி காணமல் ஆக்கப்பட்வர்களுக்கு நீதி வேண்டி நெடும்பயணம் செல்பவர்களை பெருமைப் படுத்தினர். தமிழ்த்தாய் மன்ற ஆளுநர் குழு உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் நடைபயணம் செய்பவர்களின் நெஞ்சுறுதி போற்றுதற்கு உரியது. அவர்களின் ஈகம் மிகுந்த இந்த பயணம் வெற்றிக் கொடிகட்டும் என்றார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க உறுப்பினர் திரு.இளம்பரிதி அவர்கள் உரையாற்றுகையில் 'தமிழ்த்தேசியப் பேரியக்கமும் அதன் தலைவர் ஐயா பெ.மணியரசனும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம் ' என்றார். ரொரன்ரோ கல்விச்சபை உறுப்பினர் யாழினி இராஜகுலசிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் நான் இங்கு பிறந்து வளர்ந்து இருப்பினும் என்னை சமூகம் சார்ந்து வளர்த்த நீங்கள் அபாரமாக வளர்த்து உள்ளீர்கள். நமது இனத்தின் கண்ணீர் நிறைந்த வரலாற்றை நமக்கு கடத்தி இருக்கின்றீர்கள் என்றார். நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் திரு.ஏழுமலை அவர்கள் பேசும்போது இங்கு கூடி இருக்கும் மக்களை கண்டு மகிழமுடியவில்லை காரணம் துன்பம் நிறைந்த நிகழ்வுக்கு நீதி கேட்டு நிற்கின்றோம்.

பல பல்துறை அறிஞர்களுடனான தனது கடந்தகால பட்டறிவை பகிர்ந்து கொண்ட அவர் இந்த துயரம் நிறைந்த கனலை மற்றைய சமூகத்தினருக்கும் கடத்தி விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டூறம் தமிழ்ச் சங்க உபதலைவர், டூறம் அறிவியல் கலாச்சார சங்க தலைவர் திருமதி வசந்தா, ஈழமுரசு நிர்வாக ஆசிரியர் திரு.கண்ணன், நாடு கடந்த தமிழீழ அரசவை உறுப்பினர் திரு.ஜோ அன்ரனி, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு.செல்வராசா என பலரும் உரையாற்றினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா