Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவி: ஒன்ராறியோ அரசாங்கம்! Top News
[Friday 2020-12-04 22:00]

கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் ஒன்ராறியோவில் வாழும் குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய கல்விக்கான மேலதிக செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒன்ராறியோ அரசாங்கம் மீண்டும் மொத்தமாக 380 மில்லின் டொலர்கள் நிதியை வழங்கியுள்ளது. இன்று முதல், ஒன்ராறியோவில் வசிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கவென ஏற்படுத்தப்பட்டுள்ள (Support for Learners Web Page) இணையத்தளத்தினூடாக தமது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். ஜனவரி 15, 2021 வரையும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேற்படி திட்டமானது, பாடசாலைக்குச் சென்று கல்விபயிலும் பிள்ளைகள் அல்லது மெய்நிகர் இணைய வகுப்புகளினூடாக கல்வி பயிலும் பிள்ளைகள், அல்லது இரண்டும் இணைந்த முறையில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தினருக்கு ஏற்படும் மேலதிகமான கல்விச் செலவினை ஈடுசெய்ய உதவும் முறையில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படவுள்ள உதவித் திட்டமாகும்.

இந்நிதி, கோவிட்-19 காலத்தில் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், தொழில்நுட்ப மற்றும் கல்வி மேம்பாட்டு வளங்கள் போன்றவற்றுக்கென ஏற்படும் மேலதிக செலவுகளைச் சமாளிப்பதற்கு உதவியாக அமையும். அத்துடன் குழந்தை பராமரிப்புக்கான செலவுகளுக்கும் இந்நிதி உதவியாக அமையும். இந்த முயற்சியானது, இக்கட்டான காலகட்டத்துக்கான ஒன்ராறியோவின் செயற்றிட்டத்தின் வரவுசெலவுத் திட்டம் 2020இன் ஒரு பகுதியாகும்.

ஒன்ராறியோவில் வசிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஒரு குழந்தைக்கு ஒரு விண்ணப்பப்படிவம் என்ற முறையில், ஒரு குழந்தைக்கு ஒருமுறை மட்டும் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்:

- 12 வயது வரையான குழந்தை ஒன்றுக்கு 200 டொலர்கள்

- 21 வயது வரையான விசேட உதவிகள் தேவைப்படும் பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளைக்கு 250 டொலர்கள்

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.

ஸ்காபரோ - றூஜ் பார்க்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா