Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!.. Top News
[Tuesday 2020-12-15 21:00]

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது.

"அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து"

"பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பை பறிக்காதே"

"நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே"

போன்ற எதிர்ப்பு வாசக அட்டைகளுடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை குறிதத பிரதேச செயலகத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த அதிகளவான ஊழியர்களே தங்கி நின்று கடமையாற்றும் நிலையில் தங்குமிட விடுதி மீதான தாக்குதல் அச்ச உணர்வை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாகவும், தெரிவிக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா