Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வளம் கொழிக்கும் கத்தார்..!
[Sunday 2020-12-20 08:00]

வெறும் 11571 பரப்பளவை கொண்ட மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறிய ஒரு நாடுதான் கத்தார். சொல்லப்போனால் இலங்கையை விடவும் 5 மடங்கு சிறியது. கால் வாசி இலங்கை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இச்சிறிய நாடு இன்று உலகில் மிகச்சிறந்த ஒரு நாடாக மாற்றப்பெற்றிருக்கின்றது என்றால் நாமெல்லாம் கொஞ்சம் ஆச்சரியப்படத்தான் வேண்டும். 28.3 இலட்சம் அளவில் மக்களை கொண்ட கத்தாரில் கத்தாரிகள் எனப்படும் சொந்த நாட்டவர்கள் வெறும் 10.5% வீதத்தினரே.

அதிகமாக 21.8% மான இந்தியர்கள் இங்கு வாழ்கின்றனர். இலங்கையர்கள் 4.35% மானவர்கள் வாழ்கின்றனர். பெரும் வாயு வயல்களை வரப்பிரசாதமாக பெற்ற இவர்கள் இன்று உலகில் முதலாவது பணக்கார நாடாக உயர்ந்திருக்கின்றனர். இங்கு செல்வந்த நாடுகள் என்பது தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலையே கணிக்கப்படுகின்றது.

நாட்டின் மொத்த வருமானத்தை சனத்தொகையால் பிரிக்கும் போது கத்தாரிகளின் வருமானம் ஏனைய நாட்டவர்களின் வருமானத்தை விட அதிகமாகும். மாறாக இதுதான் உலகிலையே சிறந்த பண பலம் கொண்ட நாடு என்ற கருத்து கிடையாது.

தற்போதைய ஆட்சியாளராக சேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இருக்கிறார். இங்கு அல்தானி எனப்படுவது கட்டாரின் மிக அந்தஸ்துள்ள குடும்பமாகும். இந்த ஆட்சியாளரின் காலத்திலையே கட்டார் மிகப்பெரும் வளர்ச்சிகண்டது. 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்த தயாராகிவருகின்ற கத்தார் இப்போது உட்கட்டமைப்பு, குடியிருப்புக்கள், மைதானங்கள், வீதிகள் என அனைத்தையும் நிர்மாணித்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பாலங்களும், டனல்களும் என போக்குவரத்து மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், போக்குவரத்து என ஜொலிக்கும் கட்டார் உலகின் மிகச்சிறந்த விமான நிலயத்தையும், மிகச்சிறந்த விமான சேவையான Qatar Airways ஐயும் இயக்கி வருகின்றது. ஒரு சிறிய நாடு இவ்வளவு வளர்ச்சி அதுவும் சொந்த பணத்தில் என்று வரும் போது கட்டாரில் வசிக்கும் அனேக மக்களின் ஆதரவும், நன்றி உணர்வும்தான் என்பது கண்ணுக்கு புலப்படாத உண்மை. போதுமானளவு சம்பளம், மிகச்சிறந்த வாழ்க்கை செலவு என்று வெளிநாட்டவர்கள் சம்பாதித்து வாழ்வதற்கான ஒரு சிறந்த இடம்.

அண்மையில் கூட வெளிநாட்டு வேலையாட்களின் நலன்களை பேன மத்தியகிழக்கில் எங்கும் இல்லாதவறு குறைந்தபட்ச சம்பளமாக 1800 ரியால்களையும், வேலை ஒன்றை பெற்று எந்த இடையூறும் இன்றி ஒரு கம்பனியில் இருந்து இன்னொமொரு கம்பனிக்கு மாறலாம் என்று கட்டார் அறிவித்தது அவர்கள் எங்கள் மீதுள்ள கரிசனையை காட்டுகின்றது.

முழுமையாக கட்டார் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தாலும் இங்கு திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அனைத்து இன மக்களும் தங்கள் திறமை, அனுபவத்திக்கேற்ப சிறந்த வேலைவாய்ப்புக்களில் இணைக்கப்படுகின்றனர். பாரபட்சம் இங்கு இல்லை. அனைத்து மக்களும் தங்களின் மத, கலாசார, ஆடை விடயங்களில் தங்களின் உரிமைகளை தடையின்றி செய்கின்றனர்.

நிருவாக விடயங்களில் இவர்களின் செயற்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. எமது நாட்டில் பல அரச சேவைகளில் காத்து கிடந்து செய்ய வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தங்கள் கையடக்க தொலைபேசி மூலமே இங்கு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீனான நேர விரயங்கள், அரச செலவினங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பொருதாளாதார, வியாபார, நிருவாக விடயங்களில் சிறந்து விளங்கும் இந்த குட்டி நாடு ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா