Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு! Top News
[Wednesday 2021-01-27 21:00]

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் 26-01-2021 அன்று மாலை 4 மணியளவில் சேலம், கே.எம்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இன்று 27-01-2021 காலை 10 மணியளவில் கோயம்புத்தூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

https://twitter.com/SeemanOfficial/status/1354106235495149568?s=20

எதிர்வரும் 30-01-2021 சனிக்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

இறுதியாக எதிர்வரும் 01-02-2021 திங்கட்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா