Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"நீங்கள் எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்!" - சீமான் நெகிழ்ச்சி! Top News Top News
[Monday 2021-02-22 00:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 18வது மாநில மாநாடு 20.02.2021 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

நிறைவாக மாலை 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று, மறைந்த தமிழ்ப் பண்பாட்டு பேராசான் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மாநாடு நிறைவுப் பேருரையாற்றினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சீமான் அவர்களுக்கு கைத்தறி ஆடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சராசரி இளைஞனாக பொழுதுபோக்குகளில் நாட்டம் கொண்டிருந்த என்னுள் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையை விதைத்து சராசரி எனது கல்லூரி பேராசிரியரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன்.

இதழியல் துறையின் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றுள்ள இவ்வரலாற்றுப் பெருநிகழ்வில் பங்கேற்றது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்! மக்களின் நலனுக்காக இனி வருங்காலங்களிலும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு சீமான் அவர்கள் உரையாற்றினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா