Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சொந்த மண்ணின் கதையை சொல்வேன் - பாடல்! Top News
[Wednesday 2021-03-24 22:00]

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! யாழ் வடமராட்சி கோவிற்கடவை ஆலயத் தேர் உற்சவத்தினை முன்னிட்டு "சொந்த மண்" பாடல் இன்று வெளியாகின்றது! குரல்: ஆருதி சூரியகுமார் | இசை: உதயன் விக்டர் Udayan Victor | வரிகள் : வசீகரன் | தயாரிப்பு : மாதினி சூரியகுமார் Mathiny Suriyakumar

சொந்த மண்ணின் கதையை சொல்வேன் என்று ஆரம்பிக்கும் போதே கோவிற்கடவை பிள்ளையாரை வணங்கி விட்டுதான் ஊருக்குள் நுழைய முடியும். என்னுடைய கொள்கை "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றிருந்தாலும் தாய்மண்ணை, சொந்த மண்ணை பாடுவது என்றால் கொஞ்சம் அலாதி பிரியம் எனக்கு. 100 பாடல்களுக்கு மேல் எழுதி இருந்தாலும் சொந்த ஊரை, எங்கள் சொந்த மண்ணை பாடுவதால் இந்தப் பாடல் எனக்கு முதல் பாடல் போல இருக்கிறது .

எங்கள் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து கனடா மண்ணில் வாழ்கின்ற, எனது நண்பன் சூரியகுமாரின் மனைவி சகோதரி மாதினி சூரியகுமார் அவர்கள் கடந்த ஆண்டு என்னைத் தொடர்பு கொண்டார். வசியண்ணா எனக்கு நீங்கள் ஒரு பாட்டு எழுதித்தாங்கோ என்றார் உரிமையோடு, உதயன் அண்ணா இசையமைக்க வேண்டும், நான் தயாரிக்கிறேன் என்றார். எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது (தயாரிப்புச் செலவு எனக்கில்லை தானே).

எங்கள் ஊர் தங்கை ஒருத்தி இந்தப் பாடலின் மூலம் ஓர் தயாரிப்பாளராக ஆகியிருக்கிறார். இந்தப் பாடலை பாடுகின்ற பிள்ளை கனடா மண்ணிலே பிறந்த மகள் ஆருதி சூரியகுமார் ஊரின் மேல் உள்ள பாசத்தால் உருகிப் பாடியிருக்கிறார். அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு தமிழை கலைகளுக்கூடாக ஊட்ட முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஓர் சான்றாகும். மாதினி என்னிடம் கேட்பதற்கு முன், ஆருதி சூரியகுமார் பாடிய சினிமா பாடல்கள், பக்திப் பாடல்களை நான் கேட்டதில்லை.

மனசுக்குள் சின்னத் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், தன்னுடைய ஆர்வம், கலையாற்றல் வெளிப்பாடுகள் மூலம், முழுமையான அம்மா, அப்பாவின் உற்சாகத்துக்கூடாக இந்தப் பாடலை சிறப்பாக பாடியிருக்கிறார்.

உதயன் அண்ணாவின் மெட்டினை உள்வாங்கி, அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, என்னையும் மகிழ்வுற செய்திருக்கிறார். இதயத்திற்கு நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

பதினேழு வயதுக்குப் பின் நான் இன்னும் எங்கள் மண்ணை மிதிக்கவில்லை. மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டது. ஆனால் எங்கள் ஊரில் வாழ்ந்த காலத்தின் பசுமையான நினைவுகள் என்னை விட்டு இன்னும் நீங்கவில்லை! ஒரு நாளும் நீங்காது என்பதற்கான வெளிப்பாடும் இந்தப் பாடல் ஆகும்.

ஆருதிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்னும் நிறைய பாடல்களை அவள் பாடுவாள், சிறப்பாக வருவாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இனிய நண்பர் இசையமைப்பாளர் உதயன் அண்ணா, மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் இந்தப் காணொளியை தயாரித்த மாதினி சூரியகுமார், இந்த பாடலுக்கான வீடியோ ஒளிப்பதிவை திறம்படச் செய்த ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர், குரல் பதிவு செய்த இசையமைப்பாளர் சுதர்சன், நடன ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

"சொந்த மண்" பாடலைப் பாருங்கள்.. கேளுங்கள் பிடித்திருந்தால்.. விருப்புகள் .. கருத்துகள்.. பகிர்வுகள் வரவேற்கப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா