Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஸ்காபரோவில் தடுப்பூசி மையம்! Top News
[Friday 2021-04-09 20:00]

ஸ்காபரோவில் அதிக நோய்த்தொற்று ஆபாயத்தை எதிர்கொண்டுள்ள பகுதியில் மிகவும் பயனுள்ளதும் வெற்றிகரமானதுமான உடனடி தடுப்பூசி மையத்தினை அமைத்துள்ள ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்புக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதன் சுகாதார நிபுணர்களுக்கும் எமது நன்றிகள். அத்துடன் தமிழ் மக்களுக்காக இந்த உடனடி சிகிச்சையை நடத்தும் ஸ்கார்பாரோ கொன்வென்ஷன் நிலையத்துக்கும் எமது பாராட்டுகள்.

கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசி போட்டுக்கொள்வதே. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதைக் கண்டறிந்து, உங்களுக்கான முன்பதிவைச் செய்துகொள்ள www.Ontario.ca/covidvaccine எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.

அல்லது 1-888- 999-6488 என்ற எண்ணுக்கு அழைத்து அதில் 300இற்கும் மேற்பட்ட மொழிகளில் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி அழைப்பின்போது எண் 3ஐ அழுத்தி “தமிழ்” என்று கூறுவன்மூலம் சில நிமிடங்களில் நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் இணைக்கப்படுவீர்கள்.

எனவே, கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடையவரா என்பதைக் கண்டறிந்து, உங்களுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளவும். அனைவரையும் பாதுகாப்பான, கனடிய சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் COVID-19 தடுப்பூசி பற்றி அறிந்து கொள்வதற்கு, ஏப்ரல் 9ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தலைவர் வைத்திய கலாநிதி அப்டெல் பெல்ஹஜுடன் ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்பு நடத்தும் கோவிட்-19 தொடர்பான மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் 9ஆம் திகதி, வெள்ளிக்கிழமை 6:00 pm

பதிவு செய்யுங்கள்: https://bit.ly/3wvx0EX

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா