Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது! Top News
[Saturday 2021-04-10 20:00]

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை கடற்படையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கைதானவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வத்தளை, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள், 18 வயதுக்குட்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கடந்த மார்ச் மாதம் படகு மூலம் செல்ல முயன்றவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கையிலிருந்து வெளியேறுபவர்கள் செல்லக்கூடிய இடங்களில் முதன்மையான பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ரியூனியன் தீவு ஆகியவை உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு மூலம் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைபவர்களை முழுமையாக நிராகரித்து திருப்பி அனுப்பவும் அல்லது நாடு கடத்தவும் செய்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா