Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி! Top News
[Tuesday 2021-07-20 06:00]

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவுசெய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக மன்னார் மாவட்டம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கல்வி கலை கலாச்சாரம் விளையாட்டு தனிமனித திறமைகளில் மன்னார் மாவட்டம் எப்பொழுதும் முன்னிலையிலேயே நிற்கின்றது.

மன்னர் மண்ணிற்கு பெருமை தேடித்தரும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இமானுவேல் எவாஞ்சலின் அவர்களுக்கு மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். வாழ்க வழமுடன்...

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா