Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பொதுக் குழாய்க் கிணறு திறந்து வைப்பு! Top News
[Friday 2021-08-13 18:00]

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)பணிப்பாளரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் உப தலைவருமான திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் குடிநீருக்கான குழாய் பொதுக் கிணறு திறந்து வைக்கப்பட்டது.

தாமரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவரான திரு சிவஞானம் சிவகிருஸ்ணன்(ரூபன்) அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா ஒரு லட்சத்தி தொண்ணூராயிரம் (190000.00) செலவில் குழாய் கிணறு,தண்ணீர் தாங்கி,மோட்டார் வசதிகளுடன் வள்ளிபுன பகுதியில் வசிக்கும் ஐம்பது (50) குடும்பங்கள் குடிநீர் பெறுவதற்கும் அத்தோடு செஞ்சோலை விளையாட்டு கழக மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தும் இளைஞர் யுவதிகள்,அருகில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் தொண்ணூறுக்கு மேற்பட்ட மாணவர்கள்,சுமார் 150 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் வசதி கருதி இப் பொதுக் கிணறு எம்மால் அமைத்து கொடுக்கப்பட்டது.

எமதுஅறக்கட்டளையின் அழைப்பின் பேரில் இன்றைய நிகழ்வில் அப் பிரதேசத்தை சார்ந்த மக்கள் பிரதிநிதிகளான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு.ஆண்டிஐயா புவனேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த் ஆகியோர் இணைந்து குடிநீர் கிணற்றினை பொதுமக்களின் பாவனைக்காக இன்று ஆரம்பித்து வைத்தனர்,குறித்த நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் லயன் கலாநிதி நா.தனேந்திரன், செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், பொருளாளர் T.யோசேப், உப செயலாளரும் பிரபல ஊடகவியலாளருமான வைத்தியர் இ.சற்குருநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் சதாகரன்,சமாதான நீதிவான்களான திரு மாதவராசா,திரு அருளானந்தம்,வள்ளிபுனம் கிராம மட்ட தலைவர் சு.சிவராஜ், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் (RDS) திரு ஜீவகன் ஆகியோர் உட்பட பொது மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன்,இரு நிமிட மௌன வணக்கத்தை தொடர்ந்து விருந்தினர் நிர்வாகிகளுடன் இணைந்து பொதுக் கிணற்று பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றதோடு தாமரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் அவர்களால் அறக்கட்டளையினருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மரக்கன்றுகளும் நாட்டப்பட்டதுடன், இறுதியாக ரூபனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. குறித்த செயற்திட்டத்திற்கான நிதி அனுசரணை யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த அமரர்களான திரு/திருமதி பொன்னுத்துரை இராசம்மா தம்பதியினரின் 100வது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் வாழும்அவர்களின் பிள்ளைகள். நிதி உதவியில் இந்தக் கிணறு அமைக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா