Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு! Top News
[Friday 2021-09-03 20:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர்.

மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் (04-09-2021), விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாளும் (05-09-2021) நடைபெறவிருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா