Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ் பொதுநூலகத்தில் எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்! Top News
[Friday 2021-10-22 23:00]

இன்று வெள்ளிக்கிழமை 22.10.2021 காலை எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் பொது நூலகத்தில் (பொது நூலகத்தின் பின்பக்க நுழைவாயிலில் - சிற்றுண்டிச் சாலை பக்கமாக) ஆரம்பமாகியது. இக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் பல்வேறு புத்தகங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு சிறுகதை தொகுதியையும் அங்கு பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து சனி, ஞாயிறு தினங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கண்காட்சி இடம்பெற உள்ளது. சுகாதார விதிமுறைகளை பேணி இடம்பெறும் இக்கண்காட்சியில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உறவுப்பாலமாக விளங்கும் இக்கண்காட்சி ஈழத்து எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது.

இதன் ஏற்பாட்டாளர் குலசிங்கம் வசீகரன் மற்றும் குழுவினரின் இடைவிடாத முயற்சியின் பலனாக இந்தக் கண்காட்சி சாத்தியமாயிருக்கிறது. இதற்கு முதல் சுன்னாகம் பொது நூலகத்திலும், கோண்டாவில் எழுதிரள் முன்றலிலும் குறித்த கண்காட்சி சிறப்பான முறையில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு 24.01.2020 அன்று இடம்பெற்ற யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் முதன்முறையாக ‘எங்கட புத்தகங்கள்’ எனும் தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் அணிவகுக்கும் சிறப்புப் புத்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று குறித்த கண்காட்சியின் முடிவில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனையிலும் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா