Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் தொடங்கும் "விழித்தெழு தமிழா" மாதாந்த இணையவழிக் கருத்தாடல்! Top News
[Monday 2021-11-01 08:00]

தமிழீழத் தாயகத்தில் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம், பாரம்பரிய திரிவுபடுத்தல் போன்ற கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வினை உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவற்றிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய காத்திரமான செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கோடும் "விழுத்தெழு தமிழா" எனும் தலைப்பில் இவ் வருட ஆரம்பத்தில் இருந்து மாதாந்தாந்த இணையவழிக் கருத்தாடலினை ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற (ECOSOC) ABC Tamil Oli அமைப்பு நடாத்திவருகின்றது.

பல்வேறு தடங்கல்கள் காரணமாக கடந்த இருமாதங்களாக இடம்பெறாதிருந்த குறிப்பிட்ட நிகழ்வு எகிர்வரும் ஒக்ரோபர் 06 திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகிறார்கள். வழமை போன்று இந்நிகழ்விலும் தாயகத்தில் இருந்து சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளர்களுடன் பாதிக்கப்பட்ட தரப்புக்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளும் அதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தமிழ் இளையோர்கள், தமிழர் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேற்றினத்தை சேர்ந்த ஆளுமைகளும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒக்ரோபர் 06 அன்று கனடா அமெரிக்கா நேரம் காலை 10 மணிக்கு (Eastern Time) இடம்பெறும் "விழித்தெழு தமிழா" மாதாந்த இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்தவும்;

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82760816814

Meeting ID: 827 6081 6814

One tap mobile

மேலதிக தகவல்களுக்கு:

திரு.விமல் நவரத்தினம்

நிர்வாக ஒருங்கிணைப்பாளர்,

ஏபிசி தமிழ் ஒலி (ECOSOC) & மனித உரிமைகள் செயற்பாட்டாளர், கனடா

Tel : +1 (416) 399-3449

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா