Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா! Top News
[Sunday 2022-01-16 18:00]

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக “முத்தமிழ் விழா 2022” நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. இந் நிகழ்வானது இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ் மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது யாழ் மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் “இன்றைய உலக நடைக்கு பொருந்தாத அறங்களை வகுத்துத்தந்த வள்ளுவர் குற்றவாளியா?” எனும் தொனியிலான “வழக்காடுமன்றம்” உட்பட நாத சங்கமம் மற்றும் இசை ஆராதணை என இசை நிகழ்வுகளும், சத்தியவான் சாவித்திரி மற்றும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்றியல்களை சித்திரிக்கும் நாடகங்களும் அரங்கேறியுள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா