Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதற் தடவையாக கனடியத் தமிழர் பேரவையின், உணவு வங்கிக்கான தமிழ் மரபுரிமைத் திங்கள் காலப் பங்களிப்பு! Top News
[Wednesday 2022-02-02 08:00]

தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC), 2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த ஆண்டு உணவு இயக்கத்திற்கான பயனாளியாக யோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியைக் கனடித் தமிழர் பேரவை தேர்ந்தெடுத்திருந்தது. இந்த உணவு வங்கி, யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவுச் சேவையை வழங்கி வருகிறது.

மிகக் கடுமையான குளிர் காலநிலை இருந்தபோதிலும், ஜனவரி மாத நாட்களில், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கம் 7,564 கனடிய டொலர்களை சேகரித்திருந்தது. இந்த நிதியில் பணம், உணவுப் பொருட்கள் ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

வெள்ளிக்கிழமை ஜனவரி 28, 2022 அன்று, கனடியத் தமிழர் பேரவையின், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்க உறுப்பினர்கள் திரட்டப்பட்ட நிதியையும், உணவுப் பொருட்களையும் நோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியின் நிறைவேற்றுச் செயலர் அலெக்ஸ் பிலோட்டாவிடம் ஒப்படைத்தனர்.

கனடியத் தமிழர் பேரவையின் துணைத் தலைவர் ரவீனா ராஜசிங்கம் இந்த உணவு இயக்கத்துக்கு ஆதரவளித்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மற்றும் இந்த முயற்சியில் பங்கெடுத்த கனடிய பல்லினக் கலாச்சார அவைக்கும், ஒன்ராறியோவுக்கான ஆசியர்கள் அமைப்புக்கும் ரவீனா மேலதிக சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா