Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதலாவது ரொறொன்ரோ - யாழ் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு! Top News
[Wednesday 2022-02-02 08:00]

கனடா நாட்டில் ஜனவரி மாத காலத்தில் மத்திய, மாகாண அரசுகள் மற்றும் மாநகர சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் முயற்சியால் ரொறொன்ரோ மாநகர சபைக்கும், யாழ் மாநகர சபைக்கும் இடையே உறவுப் பாலத்தை அமைக்கும் வகையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்று 2019 ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் ஓரங்கமாக ஜனவரி மாதம் 2022, 25 ஆம் தேதிஅன்று, இணையவழி ஊடாக இரண்டு மாநகர முதல்வர்களின் பங்குபற்றுதலுடன் முதன் முதலாகத் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு நடைபெற்றது..

இந்நிகழ்வானது ரொறொன்ரோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மெக்கெல்வியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. ஜெனிவர் தனது ஆரம்ப உரையில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற மாநகர சபை வட்டாரத்தை, தான் பிரதிநிதிபடுத்துவதைச் சுட்டிக்காட்டியும் , கனடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளாகிய வருடாந்த தைப்பொங்கல்-தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு, தமிழர் தெருவிழா, ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை வெற்றிகரமாக அமைவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், கனடியப் பூர்வீக மக்களின் நலன்கள், அவர்களுக்கான நீதி, நல்லிணக்கம் போன்றவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியமை போன்ற செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். மற்றும் ரொறொன்ரோ-யாழ் நகரங்களுக்குடையிலான இந்தப் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் எவ்வாறு கைச்சாத்திடப்பட்டதென்பதையும் அதன் இன்று வரையிலான செயற்பாடுகளையும் விளக்கினார்.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. சிவன் இளங்கோ உரையாற்றும்போது, நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட தமிழர்களாகிய நாங்கள் ஏனைய இனத்தவர்களுடன் இணைந்து தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் ரொறொன்ரோ மாநகர முதல்வரிடம் கனடியத் தமிழர் பேரவை ஒக்ரோபர் மாதம் 2014 இல் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளான, ரொறொன்ரோ-யாழ் மாநகர சபைகளுக்கான உறவுப்பாலத்தை அமைத்தல் மற்றும் ரொறொன்ரோவில் தமிழ் கலாச்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு உதவுதல் ஆகியவற்றுக்கு, ரொறொன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வழங்கிய பூரண ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

ரொறொன்ரோ மாநகர முதல்வர் ஜொன் ரொறி பேசும்போது, தான் இரண்டு தடவைகள் இலங்கைக்கு சென்றதாகவும், யாழ் நூலகத்தைப் பார்வையிட்டதாகவும் அதன் சரித்திர முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகவும் கூறினார். தாங்கள் யாழ் நகர முதல்வரோடு செய்துகொண்ட புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தத்திற்கு இணங்க வேலைத்திட்டங்களை, கோவிட் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் நிலைமை சீராகும்போது செயற்பாடுகளை மேற்கொள்ள இயலுமெனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ரொறொன்ரோவில் வாழ்கின்ற தமிழர்கள் கல்வி, வணிகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் உன்னதமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் அவர்கள், தமிழ் கலாச்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்குக் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். அத்தோடு யாழ் மாநகர முதல்வர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கு ரொறொன்ரோ வரும்படி அழைப்பை விடுத்துப் புரிந்துணர்வுடன் செயற்பட இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக மேலும் அமையுமென்றும் கூறினார்.

யாழ் மாநகர முதல்வர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் பேசும்போது நிலத்தால் பிரிந்தாலும், தொழில்நுட்ப மூலம் இணைந்து தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வைக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும், தன்னைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தபோது ரொறொன்ரோ மாநகர முதல்வர் கண்டனம் தெரிவித்ததை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நாற்பது வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்ட யாழ் நகரத்தைக் கட்டியெழுப்புவதில் உலக நாடுகளின் பங்கு முக்கியமானதென்றும் இதில் ரொறொன்ரோ மாநகரசபை தங்களுக்கு உதவி புரிய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் திரு ரொறி அவர்களை யாழ்ப்பாணம் வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் நடன ஆசிரியை திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்வும், நமிதா வாசுதேவனின் வாத்திய இசை நிகழ்வும் இடம்பெற்றது.

இவ்விழா நிகழ்வுகளைத் திரு. பிரகல் திரு சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா