Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உம்ரா பயணிகளுக்காக ஜித்தாவில் நடந்த இரத்ததான முகாம்! Top News
[Tuesday 2022-03-22 17:00]

வெளிநாட்டிலிருந்து உம்ரா செய்ய வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கபட்டதால் உலக நாடுகளிலிருந்து ரமலானில் உம்ரா செய்வதற்காக முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வர இருக்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக ஜித்தாவில் (19-03-2022) அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.

கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்ததான வங்கியில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. இம் முகாமில் சுமார் 76 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 57 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.

இரத்ததான குழுவின் ஒருங்கிணைப்பாளரான .பைஸல், இம்முகாம் பற்றி குறிப்பிடும் போது,

விசா எடுக்கும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக, உலகில் முதன்முறையாக ஸ்மார்ட் போண் மூலமாக எலக்ரானிக் விசா எடுக்க பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் ஏற்பாட்டை சவுதி அரசு செய்துள்ளது. இதற்கான செயலியை (App) மன்னர் மற்றும் இளவரசரின் கண்காணிப்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் கடந்த வருடம் வெளியிட்டிருந்தார். தற்போது லண்டனில் அது செயல்பாட்டில் உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுத்தி இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபிய அரசு விலக்கியிருப்பதால் உலக நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் உம்ரா பயணிகள் வர இருக்கின்றனர். அவர்களை வரவேற்று பாதுகாப்புடன் உம்ரா செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபிய உள்துறை, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறையின் வேண்டுகோளுக்கிணங்க இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது என்றார்.

வணிகரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளருமான சலாஹூதீன் பேசும் போது,

சிலருக்கு போதியளவு ஹீமோகுளோபின் அளவு இல்லாத காரணத்தாலும், இரத்த அழுத்தம் அதிகமுள்ள காரணத்தாலும், வயது மூப்பு காரணத்தாலும் குருதிக்கொடை அளிக்கமுடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

இம்முகாமில் இரத்ததானம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் நாட்டவர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். வழக்கம் போலவே பெண்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்ற அவர் அடுத்ததாக ஹஜ் பயணிகளுக்காக பிரம்மாண்டமான இரத்ததான முகாமை ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜித்தா மட்டுமின்றி ரியாத் மற்றும் தம்மாம் மண்டலங்களிலும் இரத்தானம் நடைபெற்றது.

இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்தும் 24 வது முகாமாகும்.

For More Details

Maheen (மாஹீன்) - 0550363539

Faisal - 0503902200

Salahudeen - 0508326083

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா