Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதல்வரானபின் ஹோர்வத் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40 சதவீதம் குறைப்பார்! Top News
[Thursday 2022-05-12 20:00]

கியூபெக், மனிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனை போல ஒன்டாரியோவும் பொது வாகன காப்பீட்டை ஆய்வு செய்யவுள்ளது. ஸ்கார்பரோ – NDP தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வத் வாகனக் காப்புறுதித் துறையை சரிசெய்வதன் மூலம் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40% குறைத்து, ஒவ்வொருஆண்டும் ஓட்டுநர்கள் சராசரியாக $660- ஐ சேமிக்கச் செய்வார். ஸ்கார்பரோ போன்ற சில சமூகங்களில் சராசரிசேமிப்பு கிட்டத்தட்ட $2,000-ஆக இருக்கும்.

இதைச்செய்ய, ஒன்டாரியோ NDP தபால் குறியீடு பாகுபாட்டை முடிவிற்கு கொண்டு வந்து, ஒரு நிபுணர் குழுவிசாரணைகளை மேற்கொண்டு புதிய முறைமையை பரிந்துரைக்கும் வரையான காலப்பகுதியில், வாகன காப்புறுதி கட்டண உயர்வினை 18 மாதங்களுக்கு தடை செய்வார். அப்புதிய முறைமையானது, பொது அல்லது பகுதியளவில்பொது முறைமையாக இருக்கும், அல்லது தனியார் முறைமையில் பெரிய சீர்திருத்தங்களுடனானதாக இருக்கும்.

இந்தஅறிவிப்பை ஸ்கார்போரோவின் ஒண்டாரியோ NDP வேட்பாளர்கள் இணைத்து வழங்கினார்கள், நீதான் சன் (Scarborough Centre), டாலி பேகம் (Scarborough Southwest ), ஜஸ்டின் காங்  (Scarborough North), வெரோனிகா ஹவியேர் (Scarborough Guildwood) உட்பட.

''அன்றாடம்வாழ்க்கைச் செலவை சமாளிப்பது அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு மிகவும் கடினமாகி வருகிறது. அவர்கள் மீண்டும் திடமான நிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். வாகனக் காப்புறுதி செலவைக் குறைப்பதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும்.

நாம்வசிக்கும் இடத்தின் காரணமாக வாகனக் காப்புறுதிக்கு அதிகக் கட்டணம் செலுத்துவதை நிறுத்துவோம். வாகனக் காப்புறுதி முறை சீர்குலைந்துவிட்டது, ஒன்றாகச் சேர்ந்து நாம் அதனை சரிசெய்யலாம். அவ்வாறு சரிசெய்தால், ஆண்டுக்கு $660- ஐ சேமிக்கமுடியும்,'' என்று ஹோர்வத் கூறியுள்ளார்.

ஒன்டாரியோவில்வாகன விபத்துகள் குறைந்த விகிதங்களில் உள்ளன. இருந்தாலும், இங்கு தான் வாகன காப்பீட்டுக்கட்டணங்கள் நாட்டிலேயே மிகவும் அதிகமாக உள்ளன. கியூபெக்கின் வருடாந்த சராசரி கட்டணம் $851 ஆகும். ஒன்டாரியோவில், இது $1,655 ஆகும். சில ஒன்டாரியோ ஓட்டுநர்களுக்கு கட்டணங்கள் $6,300-கும் அதிகம்.

2021 இல், பிரிட்டிஷ் கொலம்பியாவை விட ஓட்டுநர்கள் சராசரியாக 50% முதல் 72% வரை கட்டணம் செலுத்தினர்; மனிடோபாவை விட 55% முதல் 65% அதிகம்; ஸ்காட்செவனை விட 79% முதல் 116% அதிகம்.

ஹோர்வத்மற்றும் NDPயின் வாகன காப்புறுதித்திட்டத்தில் பின்வருவன அடங்கும்:

* அஞ்சல்குறியீடு பாகுபாட்டை உடனடியாக முடிவிற்கு கொண்டுவருதல். அஞ்சல் குறியீடு பாகுபாடு என்பது, பல பகுதிகளில் உள்ளஓட்டுநர்கள், ஒரே வயது, அனுபவம், வண்டி வகை, ஓட்டுநர் பதிவுஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், ஏனைய பகுதிகளில் உள்ளவர்களைவிட பாரிய வேறுபாட்டில் அதிகக் கட்டணத்தை செலுத்துகிறார்கள்.

* காப்புறுதிகட்டணங்களை உயர்த்துவதற்கு 18 மாத தடை.

* பொதுக்காப்புறுதி முறையைப் பயன்படுத்தும் மாகாணங்களில் உள்ள காப்புறுதி வல்லுநர்கள், செலவுத் தாங்குமை வாதுரைஞர்கள் (affordability advocates) மற்றும் பொதுத்துறை வாகனங்கள் தொடர்பான வல்லுநர்கள் தலைமையிலான Ontario Auto Insurance Fair Pricing Commission-ஐஉடனடியாக நிறுவைச் செய்தல்.

ஆணைக்குழுவானதுபின்வருவனவற்றை ஆய்வு செய்வதற்கு வழிபடுத்தப்படும்:

* மனிடோபா, சஸ்காட்செவன், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவற்றில் இருப்பது போன்ற பொது 'no-fault' காப்புறுதி அமைப்பு

* கியூபெக்கின்கலப்பு பொதுத்துறை மற்றும் தனியார் மாதிரி

* ஒருதனியார் no-fault காப்புறுதி அமைப்பு.

* நிரந்தரகட்டணக் குறைப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டத்தில் குறிப்பிட்ட சில சீர்திருத்தங்கள்

2020 ஆம்ஆண்டில், காப்பீடு கோருவது குறைந்திருந்த போதிலும், ஒன்டாரியர்கள் அதிக வாகனக் காப்பீட்டுகட்டணங்களைச் செலுத்தியுள்ளதுடன், ஒன்டாரியோ வாகனக் காப்பீட்டாளர்கள் 3.63 பில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியுள்ளனர்.

ஃபோர்ட்கன்சர்வேட்டிவ்கள் 15% வாகன காப்பீட்டு கட்டணக்குறைப்பு, அஞ்சல் குறியீட்டு பாகுபாட்டை முடிவுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வாக்களித்தனர். ஒன்டாரியோ லிபரல்கள் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 15 சதவிகிதம் குறைப்பதாக உறுதியளித்தனர், பின்னர் வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

இந்தவாக்குறுதியை உண்மையில் ஒரு "கடினமான இலக்கு" என்று கேத்லீன் வைன் பின்னர் கூறினார்.

QUOTES:

Doly Begum, NDP candidate for Scarborough Southwest

“Life has been getting more and more expensive. The cost of auto insurance in my riding is over $2500 on average. It’s time to stop paying more just because of where we live,” says Doly Begum. “Together with Andrea, we will finally fix the system. We’re going to end gouging and put more money in people’s pockets.”

Neethan Shan, NDP candidate for Scarborough Centre

“Postal code discrimination means some people in Scarborough and other communities are forced to pay as much as $6,000 per year.” says Neethan Shan. “Other parties have ignored this issue and the people it affects, but an NDP government will fix it.”

Veronica Javier, NDP candidate for Scarborough Guildwood

“Ontario has some of the most expensive auto insurance premiums in Canada - despite having some of the lowest accident rates,” says Veronica Javier. “At a time when it’s harder and harder to make ends meet, we will stand up for the people of Ontario and make this right.”

Justin Kong, NDP candidate for Scarborough North

“Let’s put money back in people’s pockets,” says Justin Kong. “In Scarborough, where drivers would save an average of $1325, ending postal code discrimination and exploring public auto insurance would help make life more affordable."

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா