Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு மக்களுக்கு! Top News
[Tuesday 2022-07-05 21:00]

தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் துணுக்காய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 572 குடும்பங்களுக்கும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட 417 குடும்பங்களுக்கும் இன்று பகிர்ந்தளிக்கபட்டிருந்தது. இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு அவை நேற்று மாலை பகிர்ந்தளிக்கப்பட்டிருன்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று (05) துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களிற்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 989 குடும்பங்களுக்கான 10 கிலோ நிறை கொண்ட அரிசி பைகள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 2004 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 572 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 417 குடும்பங்களுக்கும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1023 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1962 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 521 குடும்பங்களுக்கும் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா