Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரிட்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவெழுச்சிநாள் 2022! Top News
[Monday 2022-07-25 08:00]

சிங்கள பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை களவாவரம் நடந்து இன்றுடன் 39 வருடங்கள் நிறைவாகின்றது, இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.

(23/07/2022) அன்று லண்டனில் உள்ள பிரிட்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டிருந்தனர் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நினைவெழுச்சி போராட்டமானது உள்ளூர் நேரப்படி மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.

பிரித்தானிய மற்றும் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பம் ஆகிய குறித்த நினைவெளிச்சிநாளில் அகவணக்கம் , நினைவஞ்சலி நடைபெற்றதுடன் பிரித்தானிய தமிழ் இளையோரின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது அதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும், ஸ்ரீ லங்காவை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இனப்படுகொலை நடாத்திய ஸ்ரீலங்காவை பாதுகாக்க வேண்டாம், பொதுஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை கிடப்பிலே இருப்பது போன்ற மேலும் பல பாதாதைகள் தாங்கியவாறு கோஷங்களை உரைத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான இளையோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா