Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு: யேர்மனி கம்பேர்க், சோலிங்கன் நகரங்களில்..! Top News
[Monday 2022-08-22 20:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனி கம்பேர்க், சோலிங்கன் நகரங்களில் இடம்பெற்றன. இந் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி சுடர் ஏற்றி வணங்கினர்.

அத்தோடு செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளின் நிழற்படங்களை கண்காட்சியாக நிறுத்தி ஈன இரக்கமற்ற சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தினர். இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய பதிவுகளும் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா