Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் லண்டனில் நடைபெற்ற கவயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2022-08-31 21:00]

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி தாயகத்தில் இடம்பெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக லண்டனில் ஒன்றுகூடிய தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசினால் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டமானது உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது.

லண்டன் பிரதமர் பணிமனைக்கு அருகில் உள்ள talfaresquare என்னும் பகுதியில் ஒன்றுகூடிய பெருமளவிலான தமிழ் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையை உடன் நடாத்த வலியுறுத்தியும் ஸ்ரீ லங்காவில் ஒரு பொது வாக்கெடுப்பை நடாத்த வலியுறுத்தியும் , மேலும் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இதேவேளை குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா