Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று மல்லாவியில் அனுஸ்டிப்பு! Top News
[Friday 2022-09-16 06:00]

பாரத தேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தன் வாழ்வை தமிழரின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும். தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இடம்பெறுகிறது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மல்லாவியில் சிறப்பாக இடம்பெற்றது

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வ ஜன நீதி அமைப்பும் இணைந்து 10.09.2022 அன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரை வந்தடைந்த நிலையில் அங்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா