Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா! Top News
[Wednesday 2022-10-19 18:00]

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாடு பெருவிழா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேச மக்களால் பாண்பாட்டு நடனங்கள் மற்றும் வாத்தியங்கள் முழங்க மண்டபத்திற்கு வெகு விமர்சையாக அழைத்து வரப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் விருந்தினர்களைவரவேற்கும் முகமாக மல்லாவி நர்த்தனாலயா மாணவிகளினால் வரவேற்பு நடனமும் கோலாட்ட நடனங்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

பிரதேச செயலாளர் ச.லதுமீரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் , சி- ராஜமல்லிகை (பிரதிப்பணிப்பாளர்- பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடமாகாணம்).

கை -பிரகாஸ்-வவுனிக்குளம் நீர்பாசன பொறியியலாளர்- மற்றும் கௌரவ விருந்தினராக பரமு தணிகாசலம்- மூத்த கலைஞர், துணுக்காய் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் கிராம மக்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா