Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் முதற்கட்ட போட்டிகள் ஆரம்பம்! Top News
[Thursday 2022-10-27 20:00]

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் அனுசரணையுடன் YAN அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் "போதைக்கெதிரான பாதை" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கை நேற்றையதினம் (26) ஆரம்பமானது. இதன் முதற்கட்டமாக மாணவர்களுக்கான சித்திரப்போட்டி, சுலோகம் எழுதுதல் போன்ற போட்டிகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்றையதினம் (26) நடைபெற்றது. இப் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகள் ஆரம்பமாக முன்னர் மதன்ராஜ் அவர்களால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைப்பு வழங்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியர்களாலும் மேலதிகமாக விழிப்புணர்வு கருத்துக்களுடன் போட்டியின் தன்மை, ஒழுங்கு விதிகள் தொடர்பாக பூரண விளக்கமளிக்கப்பட்ட பின்னர் போட்டி ஆரம்பமானது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சமூக நலவிழிப்புணர்வுடன் ஆர்வமாக கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவற்றிற்கான போட்டி முடிவுகள் மதிப்பிடப்பட்டு எதிர்வரும் திங்கட் கிழமை பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலைகளிலும் இப் போட்டிகளுடன் போதைப்பொருளுக்கெதிரான விழிப்புணர்வுப் போட்டிகளை எதிர்பார்த்துள்ளோம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா