Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாணவர்களின் விபத்துகளை தடுப்பதற்கு வலி. மேற்கு பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு! Top News
[Friday 2022-10-28 21:00]

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கு வலி. மேற்கு பிரதேச சபை முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்துள்ளது. அதாவது, பாடசாலைக்கு அருகில் பிரதான வீதிகள் காணப்படுகின்றமையால் அந்த வீதியால் நடந்து செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு வீதியில் வைப்பதற்கு கம்பங்களையும் அதற்கான பட்டிகளையும் வலி. மேற்கு பிரதேச சபை வழங்கியுள்ளது.

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது எண்ணக்கருவிற்கு அமைவாக வலி. மேற்கில் பிரதான வீதியோரங்களில் உள்ள ஒன்பது பாடசாலைக்கு இவ்வாறு கம்பங்கள் கையளிக்கப்பட்டது.

பொலிஸாரின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக்கு கம்பங்கள் கையளிக்கும் இந்த நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், வட்டுக்கோட்டை மற்றும் இளவாலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா