Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2020! Top News
[Friday 2022-10-28 21:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 151 நிறுவனங்கள் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை சுவீகரித்துக் கொண்டன. விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவானது இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.S.M.Saman Bandulasena (பிரதம செயலாளர் வடக்கு மாகாணம்), திருமதி K.D.R.Olga (மேலதிக செயலாளர் ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு), திருமதி.Champika D.Dharmasena (பணிப்பாளர்,தேசிய உற்பத்தி திறன்) ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை பெற்றுக்கொண்ட நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டம் 5 விருதுகளையும்,முல்லைத்தீவு மாவட்டம் 9 விருதுகளையும், யாழ்ப்பாண மாவட்டம் 73 விருதுகளையும், மன்னார் மாவட்டம் 16 விருதுகளையும்,வவுனியா மாவட்டம் 3 விருதுகளையும், திருகோணமலை மாவட்டம் 10 விருதுகளையும்,மட்டக்களப்பு மாவட்டம் 35 விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டில் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதனையும் தேசிய அபிவிருத்தியை அதிகரிப்பதனையும் நோக்காக கொண்டு தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா