Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாங்குளத்தில் சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறந்து வைப்பு! Top News
[Friday 2022-10-28 21:00]

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி ஆரோக்கிய உணவக திட்டத்தின் கீழ் A9 வீதி மாங்குளத்தில் அமையப்பெற்ற சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் இன்று(28) காலை 10.30மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த ஆரோக்கிய உணவகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

மேலும் இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு.முபாரக் சிறப்பு விருந்தினராகவும், முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, கட்டடத்தின் நாடாவினை வெட்டி குறித்த சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, குறித்த சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் அதிதிகளால் பார்வையிடப்பட்டது.

நாடாளாவிய ரீதியாக 21 சமுர்த்தி ஆரோக்கிய உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 20வது மையமாக இது இன்று இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளின் உள்ளூர் மூலப்பொருட்களினைக் அடிப்படையாகக் கொண்டு பாரம்பரியமான ஆரோக்கியமான உணவினை, வருமானத்தினை அடையும் வகையில் இச் செயற்றிட்டம் அமைந்துள்ளது.

மேலும் குறைந்த விலையில், ஆரோக்கியமான தரமான உணவினை பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

நான்கு மில்லியன் செலவில் அமையப்பெற்ற இச் செயற்றிட்டத்தினை மாங்குளம் சமுதாய அடிப்படையிலான வங்கி சங்கம் கண்காணிப்பினை மேற்கொள்ளும்.

குறித்த திட்டத்தின் கீழ் பத்திற்கும் மேற்பட்ட நேரடி பயனாளிகளும், சமுர்த்தி உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தமது உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்வர்.

மேலும் இவர்களுக்கான துறைசார்ந்த பயிற்சிகள் ஏலவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்திஅபிவிருத்திதிணைக்கள சிரேஷ்டமுகாமையாளர், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச சபை உத்தியோகத்தர், மாங்குளம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர்கள், மாங்குளம் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா