Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப் போட்டிகள்! Top News
[Sunday 2022-10-30 20:00]

30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றன. கடந்த 28.10.2022 அன்று ஆரம்பித்த இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள 92 தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து 600 போட்டியாளர்கள் பங்குபற்றினர். 17 வயதுப் பிரிவு மற்றும் 20 வயதுப் பிரிவின் கீழ் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.

17 வயதின் கீழ் பிரிவில் ஆண்கள் அணியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி முதலிடத்தையும், 17 வயதின் கீழ் பிரிவில் பெண்கள் அணியில் நுகேகொட மகமாயா பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

அத்துடன் 20 வயதின் கீழ் பிரிவில் ஆண்கள் அணியில் வாரியபொல ஸ்ரீ ஞானோதயா மஹா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், 20 வயதின் கீழ் பிரிவில் பெண்கள் அணியில் மகமாயா பெண்கள் கல்லூரி முதலாமிடத்தையும் தட்டிச் சென்றது.

இந்நிகழ்வில் கல்வியமைச்சில் இருந்து வருகை தந்த லலித் பந்துல குணவர்தன, சிசிர வன்னியராச்சி, வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சத்தியசீலன், கரம் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் பார்வையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா