Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நூல் வெளியீடு! Top News
[Tuesday 2022-11-08 21:00]

சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்தின், அரசறிவியல் மன்றத்தினால் வெளியிடப்படும் "அதிகாரம்" நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு இன்றையதினம் (08) பாடசாலையின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதம விருந்தினரான திரு. ஈ. சரவணபவன் அவர்கள் நூலினை வெளியிட, தொழிலதிபர் ஆ.குணசேகரம் அவர்கள் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார்.

பாடசாலை அரசறிவியல் மன்றத்தின் தலைவர் செல்வன் யோ.அலெக்சன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் விருந்தினர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா