Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் நிதியுதவியுடன் மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு! Top News
[Sunday 2022-11-20 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் 14-11-2022 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுளளன.

குறிப்பாக மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது

குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்ட போதும் அதன் செயல்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இவ்வாறு இன்றைய தினம் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டிருக்கின்றன

இதனை பயன்படுத்தி சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சை பெற இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையின் பல பாகங்களிலும் இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும் ஏனைய நோயால் வாடும் நோயாளிகளுக்கு பலவிதமான மருத்து உதவிகள் செய்துவரும் இந்த செந்தில்குமரன் நிதியத்தால் இதுவரை 94 பேருடைய இருதய சத்திர சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு அவர்களுடைய உயர் காக்கப்பட்டுள்ளது அத்தோடு 200 குடும்பங்களுக்கு வாழ்வதார திட்டங்கள் மேற்கொண்டு தொடர்ச்சியாக செந்தில்க் குமரன் நிவாரண நிதியத்தினால் மேற்கொண்டு வருவதோடு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கும் நோயாளிகளை அவர்கள் வீட்டிற்கே சென்று தாதியினை கொண்டு வழுங்கும் சேவையான "நடமாடும் மருத்துவ சேவையினை" கிளிநொச்சியில் கடந்த 7 வருடமாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மல்லாவி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகர் செந்தில்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் பா.ம.உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர் பயனாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா