Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம்! Top News
[Saturday 2022-12-31 17:00]

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம் இன்றையதினம் (31.12.2022) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ. விஜயமோகனராசா கலந்துகொண்டார்.

இதன்போது புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை க.பொ.த.உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளில் சித்தி எய்திய கூட்டுறவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கல்வியில் சிறந்து விளங்கும், சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ச.ப.நோ.கூ.ச தலைவர் ப.கேசவதாசன், சங்கத்தின் பொது முகாமையாளர் திருமதி. கிருஷ்ணவேணி, சங்கத்தின் பணிப்பாளர் சபையினர், சங்கானை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் திரு.ந.தனேஷ், சங்கத்தின் முன்னாள் பணியாளர் ப.கரிகாலன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.பாலகுமார், ஹற்றன் நேஷனல் வங்கியின் சங்கானை கிளை முகாமையாளர் என்.பெனற், சங்கத்தின் ஊழியர்கள், சங்கத்தின் அங்கத்தவர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா