Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு பரிமாற்றச் சங்கம் பொங்கல் பொதிகள் வழங்கல்! Top News
[Friday 2023-01-13 21:00]

சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக , உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது குடும்பங்களுக்கும் மற்றும் வருமானம் குடும்பங்களுக்கும் உணவுகளை பகிர்ந்து வழங்குதலுமாகும்.

அந்தவகையில் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி. எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைவாக , J / 108 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள செட்டித்தெருவில் இயங்கும் நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தில் உணவுப் பரிமாற்றச் சங்கம் ( உணவு வங்கி ) அண்மையில் தாபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவராக திருமதி இ.இராகினி , செயலாளராக திரு.ச. லோகசிவம் , பொருளாளராக திருமதி கி.கௌசல்யா முகாமையாளராக “ சேவைச்செம்மல் " திரு . வி . சங்கரப்பிள்ளை உட்பட 13 பேர் அடங்கிய உறுப்பினர்களைக்கொண்டு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ர. யசோதினி , கிராம அலுவலர் திரு . ஜெ.லினேஸ் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு . ம . உதயசங்கர் ஆகியோர்கள் ஆலோசகர்களாகவும் உள்ளார்கள்.

செயற்றிட்டத்தினூடாக அமரர் சங்கத்தின் முதலாவது அபிராமிப்பிள்ளை சங்கரப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தின் நிதி உதவியுடன் 2023.01.11ந் திகதி அன்று தலா ரூபா . 3,000.00 பெறுமதியான 25 பொங்கல் பொதிகள், பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் பிரசன்னத்துடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் உணவு வங்கி தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா