Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஸ்ரீ லங்காவின் சுதந்திரநாளினை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Sunday 2023-02-05 07:00]

லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீ லங்காவின்வின் தூதரகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட புலம்பெயர் தமிழ் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டமானது காலை 11.00 அளவில் தொடங்கியது.

13வது அரசியல் யாப்பில் அமைந்துள்ள விடயங்கள் தமிழ் மக்களுக்கு போதுமானவையாக இல்லை என்பதுடன் அதை புறக்கணித்தும் ,கடந்த காலங்களில் சிங்கள அரசினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வெளிக்கொணர்வு விசாரணையை சர்வதேசம் நாடாத்த கோரியும் , அரசியல் கைதிகளின் விடுதலையையும் , தற்போது இலங்கைத்தீவில் நடைபெற்றுவரும் நில அபகரிப்பு நிறுத்தப்பட கோரியும் ,பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மேலும் தமிழர்களின் உரிமைகைகளை நிலைநிறுத்த சர்வதேசம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளையும் ஏந்தியபடியும் கோஷங்களையும் எழுப்பியபடியும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா