Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்! Top News
[Monday 2023-02-27 20:00]

நேற்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனவும் அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 10ம் நாளாக தொடரும் அறவழிப் போராட்டம்.

கடந்த 2021 தை மாதம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் மதிபிற்குரிய மிசேல் பஸ்சேல் அம்மையார் அவர்கள் “தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும்” எனப் கூறியிருந்தார். அவரின் கருத்தை மனித உரிமைகள் ஆலோசனை அவையின் கூட்டத் தொடரில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கக் கோருவதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து தமிழ் உறவுகளும் போராட முன்வரவேண்டும்.

எமது இலக்கான சுதந்திர தமிழீழம் அங்கீகரிக்கப்படவும் சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொண்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நடாத்தவும் வேண்டுமெனக் கோரி நடைபெறுகின்ற அறவழிப்போடங்களில் சர்வதேச ஊடகங்களும் முக்கிய அரசியல் மையங்களும் கவனம் செலுத்தும் இவ்வேளை எந்தத் திரிபும் விட்டுக்கொடுப்பும் இன்றி நாம் தொடர்ந்தும் போராட வேண்டும்.

அதன் அடிப்படையிலேயே 26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து ஐரோப்பாவின் மிக முக்கிய அரசியல் மையங்களில் ஒன்றான பிரான்சு ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பபு ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ராஸ்பூர்க், இல்கிரிச், ஆகிய நகரசபைகளில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளித்து பின் எர்ச்தைன் நகர சபையின் முன்றலில் முடிவுக்கு வந்தது. இவ்வறவழிப்போராட்டம் எதிர்வரும் 01/03/2023 புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சுவிசு நாட்டின் பாசெல் எல்லையினை சென்றடையும். சவால்கள் வழி நெடுகிலும் இருப்பினும் உடல் உபாதைகளையும் தாங்கி விடுதலை பெருவிருப்பும் விட்டுக்கொடுப்பின்றி இடித்துரைக்கப்படுகின்றது இப்போராட்டம் மூலமாக. 52வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் அறிந்த எம் உறவுளே, உங்கள் நகரங்களில் இந்தப் போராட்டம் பயணிக்கையில் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்றத் தவறாதீர்கள். இது காலத்தின் கட்டாயம்.

“எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்” - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா